Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
கவிதை எழுதுவது ஒரு கலை. கவிதை வாசிப்பது ஒரு கலை. கவிதை குறித்து விமர்சிப்பதும் ஒரு கலை. முதல் கவிதை எழுதிய போதே முதல் விமர்சனமும் எழுந்திருக்கும். தமிழில் முதல் விமர்சகர் என்று அறியப்பட்டவர் விமர்சகர் வெங்கட்சாமிநாதன். விமர்சனங்கள் மட்டுமே எழுதி பெயர் பெற்றவர் வெங்கட்சாமிநாதன். அவர் வழியிலேயே விமர்சனப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். விமர்சனங்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. விமர்சனங்களும் வந்தன. எழுதப்பட்ட விமர்சனங்களுக்குக் கிடைத்ததை விட எழுதப்படாத விமர்சனங்களுக்கு ஏன் எழுதப்படவில்லை என்னும் விமர்சனங்களும் வந்தன.
விமர்சனங்களை எல்லாம் தொகுத்து ஒரே தொகுப்பாகக் கொண்டு வருவது சாத்தியமில்லாதது. 'கவிதைகள் குறித்த ஒரு கருத்துரையாடல்' என்னும் இத்தொகுப்பிலும் பல்வேறு கவிஞர்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய இருபது விமர்சனங்களின் தொகுப்பாகும். விமர்சனங்கள் குறித்த தங்கள் விமர்சனங்கள் அவசியம் எதிர்பார்க்கிறேன்.
Release date
Ebook: 3 March 2023
English
India