Step into an infinite world of stories
இந்த நாவல், எனது வாசகர்களிடையே மிகுந்த பரபரப்பை உண்டு பண்ணியது... 'இப்படியொரு முடிவை நீங்கள் கொடுக்கலாம்' - என்று எழுதித் தள்ளியவர்கள் ஏராளம். அதே போல - 'இதுதான் முடிவு... நந்தினியைக் காப்பாத்தினீங்க...' இப்படி சிலரும் எழுதினார்கள்... குடிகாரக் கணவனைத் திருத்த முயற்சிக்கலாம்... அவனோடுப் போராடலாம். பட்டினி கிடக்கலாம். ஆனால், இதுவே தொடர்கதையாகும் போது... எந்தப் பெண்ணுக்குள்ளும் இப்படிப்பட்ட எண்ணம் தோன்றத்தான் செய்யும்... செயல் படுத்துகிறார்களோ-இல்லையோ. அது வேறு விஷயம்… இக்கதையின் நாயகி நந்தினி கூட நிஜமானப் பாத்திரம்தான். என்னிடமே சொல்லி அழுதிருக்கிறாள்... "எங்க அம்மா, வாழா வெட்டியா என்னை வீட்டுல வச்சுக்க மாட்டேங்கறா... அடுத்த தங்கையோடக் கல்யாணம் இதனாலத் தடைபடுமாம்... விதவையா வந்தாத்தான் ஏத்துப்பாங்க போல இருக்கு... கடவுளே... சீக்கிரமா என் தாலிய உன் உண்டியல்லே கொண்டு வந்துப் போடும்படி செய்யின்னு...” மேற்கொண்டு எதுவும் பேச முடியாதவளாய் அவள் விசும்பிய விசும்பல்... இன்றும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது... தயவு செய்து, இதைப் படிக்கும் சகோதரர்கள்- இது போன்றதொரு துர்பாக்கிய முடிவுக்கு, தங்கள் வீட்டுப் பெண்கள் தள்ளப்படாமல் பார்த்துக் கொண்டாலே போதும்... என் எழுத்துக்கு கிடைக்கும் மிகப் பெரிய மரியாதையாகக் கருதுவேன்.
Release date
Ebook: 5 February 2020
English
India