Step into an infinite world of stories
Short stories
‘மழலை உலகு' என்ற தலைப்பின் கீழ் உமையவன் படைத்த சிறுவர்களுக்கான நீதிக்கதைகள் அத்தனையும் படித்தேன். ஒவ்வொரு கதைக்குப் பின்னாலும் அந்தக் கதைக்குப் பொருத்தமான குறளைத் தந்து, கதையின் நோக்கினை விளக்கி, அந்தக் குறட்பாக்களை மனதில் பதியுமாறு வரைந்த விவரம் தனித்துவம் பெற்று இருக்கின்றது.
இலக்கியப் பயணத்திலும், ஆன்மிகப் பயணத்திலும் கவிதை உலகிலும், தனது சாதனையைப் படைக்க வேண்டும் என்று துடிப்புள்ள இளமையோடு செயல்படுகின்ற உமையவனின் எழுதுகோல் முத்திரை பதிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
சிறுவர்களுக்காகப் படைத்துள்ள கதைகள் அத்தனையும் தமிழ் அன்னையின் கழுத்தில் முத்தாரமாக ஒளி விடுகின்றன. உமையவன் இன்னும் பல நூல்கள் ‘ஹைகூ’ என்னும் கவிதை வடிவிலும், தன்னம்பிக்கை நூல் ஒன்றும் படைத்துக் கொண்டிருக்கிறார் என்பது மகிழ்ச்சியான செய்தி.
அவரது பணிகள் புகழ் பாதையில் பீடு நடை போட அந்த உமையவனே அருள் தருக என வாழ்த்துகின்றேன்.
அன்புடன்
நீதியரசர் தி. நெ. வள்ளிநாயகம்
Release date
Ebook: 2 July 2020
English
India