Step into an infinite world of stories
“ஓ! தினம் ஒருத்தியைத் தேடுபவனுக்கு என்ன பெயரோ? ‘நேற்று இதே அறையில் வேறு ஒருத்தங்க இருந்தாங்க’ என்று அந்த ரிஸார்ட் ஆள் தெள்ளத் தெளிவாகச் சொன்னானே! ஜோ சாரிடம் வல்லிசாகப் பணம் வாங்குவேன் என்று கூடச் சொன்னான். நீ எத்தகைய எண்ணத்தில் என்னை அங்கே வரவழைத்தாய் என்று நினைக்கும்போதே நெஞ்சம் நடுங்குகிறது ஜோகர். கடைந்தெடுத்த அயோக்கியன் நீ!”
“என் கோபத்தைக் கிளறாதே மதுசூதனா. தேவையின்றி வார்த்தைகளைத் தெறிக்க விடாதே! உன்னை அப்படியொரு எண்ணத்தில் வரச் சொல்லவில்லை. ஆண்டவன் சத்தியமாகச் சொல்கிறேன். உன்னை அப்படியொரு எண்ணத்தில் அங்கே வரவழைக்கவே இல்லை.”
“ஸ்டுப்பிட்! இந்தக் கேடுகெட்ட விஷயத்திற்கு ஆண்டவன் பெயரை எடுக்காதே. ரிஸார்ட்டில் அந்த ஆள் சொன்னதை வைத்துப் பார்த்தால், நிறைய பெண்களை ‘அந்த மாதிரி’ எண்ணத்தில், நீ வரச் சொன்னதாகத் தானே அர்த்தம். மனைவியை இழந்த துக்கத்தைத் தீர்க்க, இப்படியொரு வழி. ரிஸார்ட்டுக்கு அடிக்கடி செல்கிறேன் என்று நீ சொன்னதன் பொருள் இப்போதல்லவா எனக்குப் புரிகிறது. ஆப்பைத் தேடி அமர்ந்த பிறகு வாய்ஜாலம் எதற்கு? நல்லவேளை. கடவுள் என்பக்கம் இருக்கிறார். மறுமணத்திற்கு முன்பு உன் யோக்கியதை தெரிய வந்ததால் தப்பித்தேன்.”
Release date
Ebook: 15 May 2021
English
India