Step into an infinite world of stories
1 of 5
Non-Fiction
அறிஞர் பெருமக்கள் சொல்வதைப்போல “பலர் இந்த பூமியிலேயே பிறக்கிறார்கள் இருக்கிறார்கள் இறக்கிறார்கள் சிலர் மட்டும்தான் இந்த பூமியிலே பிறக்கிறார்கள் வாழ்கிறார்கள் இறக்கிறார்கள்” என்று கூறியதைப் போல புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் இந்த பூமியில் வாழ்ந்தார். இன்றளவும் மக்களால் பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறார்.
இந்நூல் ஆசிரியர் எஸ்.பி. பாலு அவர்கள் பரவலாக நாளிதழ்களில் பன்முகத்தன்மை உள்ள கட்டுரைகள் எழுதுவதில் வல்லுநர் ஆவார். புரட்சிக்கலைஞர், கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய வாழ்க்கையைச் சுவைபட இந்நூலில் சொல்லியுள்ளார்.
வாசகர்கள் இந்நூலை முதல் பக்கம் எடுத்து கடைசி பக்கம் வரை படித்து முடிக்காமல் கீழே வைக்க மாட்டார்கள் என்பதை நான் உறுதிபட கூறுகிறேன். காரணம் அவருடைய எழுத்து வல்லமை எளிமையானது, இனிமையானது, நயமானது.
இந்நூல் விஜயகாந்த் தொண்டர்களுக்கும் இரசிகர்களுக்கும் நிறைய புள்ளி விவரங்களைத் தந்து அடிப்படையான செய்திகளைப் படிப்பதற்கும் மனதில் நிறுத்துவதற்கும் பெரும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. வருகின்ற காலத்தில் விஜயகாந்த் அவர்களின் பன்முகத்தன்மை வாய்ந்த பேராற்றல்களை தனித்தொகுதிகளாக நூல் எழுதும் தகுதி இந்நூல் ஆசிரியர் எஸ்.பி. பாலு அவர்களுக்கு வந்துள்ளது என்பதற்கு இந்நூலே சாட்சியாகிறது. விஜயகாந்த் அவர்களைப்பற்றிய ஆராய்ச்சியாளராகவும் மாறியுள்ளார்.
Release date
Ebook: 28 August 2025
English
India
