Punnagai Varam Pattukottai Prabakar
Step into an infinite world of stories
சினிமாவில் சேர்ந்து பிரபலமான நடிகராக வேண்டும் என்ற கனவில், சங்கீதம், நடனம், சண்டைப் பயிற்சிகள், குதிரையேற்றம் என சகலமும் கற்றுக்கொண்டவன் நான். வசதியான குடும்பத்தைச் சேர்ந்த நான் படிப்பை பாதியில் விட்டுவிட்டு சினிமா வெறியில் சென்னைக்கு வந்து கடந்த நாலைந்து வருடங்களாக சிரிப்பாய் சிரித்து அரைப்பட்டினியும், கால் பட்டினியுமாக காலத்தை ஓட்டுகிறேன். அத்தனையும் கற்றதற்கு சினிமாவில் எனக்குக் கிடைத்த சன்மானம் என்ன தெரியுமா? நான் ஒரு டூப்! ஆம், சண்டைக் காட்சிகளில் கதாநாயகனுக்கு டூப் பின்னணிய இசையில் ட்ராக் பாடகன். இப்படியும் சகலமும் நிழல்! இந்த நிழலின் நிஜங்களை இனி நீங்கள் சந்திக்கலாம்...
Release date
Ebook: 13 September 2022
English
India