Step into an infinite world of stories
மகரந்த செல்வனும், பொன்மணியும் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபடும் நவீன காதலர்கள். சித்ரா பௌர்ணமியன்று கடலிலிருந்து தோன்றிய ஒரு அதிசய மனிதரிடமிருந்து ஒரு அரிச்சுவடியைப் பெறுகின்றனர். அந்த அரிச்சுவடியிலிருந்து, பண்டைய காலத்தில் மன்னரின் அனுமதியோடு மணிமாறன் என்ற வைத்தியன் கடல் நீரிலிருந்து தங்கத்தை பிரித்து கொண்டுவர குலோத்துங்கன், சிவசேகரம் ஆகியோருடன் கடற்பயணம் மேற்கொண்டு தங்கத்தை கண்டறிந்தான். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர்கள் யாரும் மீண்டும் கரை சேரவில்லை, கப்பலும் கடலில் மூழ்கியது என்பதை அறிகின்றனர். எனவே அந்த கப்பலையும், தங்கத்தையும் தேடி செல்வனும், பொன்மணியும் தனது பணியாட்கள் மற்றும் நண்பர்களுடன் செல்கின்றனர். கப்பலை கண்டார்களா? அதற்கிடையில் நடந்த மர்மமான நிகழ்வுகள் என்ன? முந்தைய கப்பலின் நிலைக்கான காரணம் என்ன? தங்கத்தை எடுக்க சமுத்திரம் சென்றவர்களின் வாழ்க்கைக் கதையை வாசித்து அறியலாம்...
Release date
Ebook: 8 March 2022
English
India