Step into an infinite world of stories
Fiction
வீடு வீடாக சென்று பொருட்களை விற்கும் சேல்ஸ் கேர்ள் மதுமிதா. வெளியூரிலிருந்து வந்து நகரத்தில் லேடீஸ் ஹாஸ்டலில் தங்கியுள்ளாள். அவளது சேல்ஸ் டீம் லீடருக்கு அவள் மீது ஒரு கண். பலமுறை அவளிடம் அசிங்கமாய் வழிந்து அவமானப்பட்டிருக்கிறான். அதன் காரணமாய் அவளைப் பழி வாங்கும் நோக்கத்தோடு மோசமான கல்லூரி மாணவர்கள் அதிகம் தங்கியிருக்கும் தெருவிற்கு அவளை வியாபாரம் செய்ய அனுப்புகிறான். அவள் மறுக்க, “அப்படியென்றால் என்னைக் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணு” என்கிறான்.
அவனை முறைத்து விட்டு, தைரியமாய் அந்த தெருவிற்குச் செல்கிறாள். அங்கு ஒரு வீட்டில் இருந்த நடுத்தர வயதுக்காரர், தன் மனைவியிடம் கேட்க, “அவள் மொத்தப் பொருட்களையும் வாங்கிக் கொள்ளுங்கள்” என்கிறாள். அவரும் அதே போல் செய்கிறார். அவள் மேற் கொண்டு எந்த வீட்டிற்கும் செல்லாமல் திரும்புகிறாள். டீம் லீடர் தொடர்ந்து அவளை அதே தெருவிற்கு அனுப்ப ஒவ்வொரு முறையும் அந்த நடுத்தர வயதுக்காரர் மனைவியின் சம்மதத்தோடு மொத்தப் பொருட்களையும் வாங்கிக் கொள்கிறார்.
ஒரு நாள் வேறொருத்தர் மூலமாக அந்த நடுத்தர வயதுக்காரரின் மனைவி இறந்து ஒன்றரை வருடமாகிறது, என்னும் தகவலைத் தெரிந்து கொண்டு கோபமாக வருகிறாள் மதுமிதா. அடுத்த நடந்த அனைத்துமே படிப்பவர்களை புருவம் உயர்த்தச் செய்யும்.
Release date
Ebook: 18 May 2020
English
India