Step into an infinite world of stories
5
Personal Development
அன்றாட வாழ்க்கையில் நாம் சந்தித்தாக வேண்டிய பிரச்சினைகள் ஏராளம். ஓயாத கடல் அலை போல நம் வாழ்க்கையிலும் அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக பிரச்சினைகள் வந்து போய்க் கொண்டு இருக்கின்றன. கடல் அலைகளுக்கு நடுவே போராடினால்தான் மீன்களும் கிடைக்கும். மூழ்கி மூழ்கி எழுந்தால்தான் முத்துக்கள் கிடைக்கும். நாமும் வாழ்க்கை சாகரத்தில் பிரச்சினைகளுக்கு நடுவே போராடினால்தான் அதில் தீர்வு காணமுடியும். மேலும் முத்துக்களைப் போன்ற சாதனைகளைப் புரிய முடியும். இந்தப் புத்தகத்தில் வரும் பிரச்சினைகள்... ஒவ்வொரு மனிதனும் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கும், சந்திக்கப்போகும் பிரச்சினைகள்தான். தீர்வுகள் நம் கைகளில்தான் இருக்கின்றன. எந்தப் பிரச்சினையையுமே உணர்வு பூர்வமாக அணுகாமல் அறிவு பூர்வமாக அனுகினால் தீர்வுகள் சுலபமாகிவிடும்.
இந்நூலில் உள்ள எனது கட்டுரைகள் ஏற்கனவே பிரபல மாத இதழ்களில் வெளிவந்து வாசகர்களின் பாராட்டுகளைப் பெற்றவை. வெளியிட்டு சிறப்பித்த பத்திரிகை ஆசிரியர்களுக்கு நன்றி.
எழுத்தார்வத்தை என் இரத்தத்தில் ஊட்டிய என் தாயார் நாவலாசிரியை லீலா கிருஷ்ணனுக்கும், அவ்வப்போது ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து வரும் என் கணவர் வழக்கறிஞர் என், தெய்வசிகாமணி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
இந்நூலைப் படிக்கும் வாசகர்களின் விமர்சனக் கடிதங்களை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி, வணக்கம்.
கீதா தெய்வசிகாமணி
Release date
Ebook: 30 September 2020
Tags
English
India