Step into an infinite world of stories
Personal Development
நான்கு வருடங்களில் அவ்வப்போது ஏற்பட்ட அனுபவங்களின் காரணமாக எழுதிய கட்டுரைகளை எப்படியும் புத்தகமாகக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று நினைத்தேன். மேலோட்டமாகப் பார்த்தபோது அவை பலவிதமான கட்டுரைகளாகத் தெரிந்தன. இவற்றை எப்படி ஒன்று சேர்ப்பது என்று புரியவில்லை. பின்பு கவனமாகப் பார்த்தபோதுதான், என்னை அறியாமல் நான் அவற்றை மொத்தம் இரண்டு வகைகளாக எழுதியிருப்பதாகத் தோன்றியது. ஒரு சாரார், பிள்ளைகள், இளைஞர்கள், ஊழியர்கள், முன்னேறத் துடிப்பவர்கள்; இன்னொரு சாரார், பெற்றோர், அதிகாரிகள், முதலாளிகள், கொஞ்சம் முன்னேறிவிட்டவர்கள். இந்தப் புத்தகத்தில் கால மாற்றத்திற்கு ஏற்ப சில கட்டுரைகளை எடுத்து விட்டேன். உதாரணத்திற்கு, ‘தடையேதுமில்லை’ புத்தகத்தில் வந்த ‘விடுமுறை என்ற வாய்ப்பு’ இன்றைக்கு இதைப்பற்றிய விழிப்புணர்வு கணிசமாகவே இருக்கிறது. அதே போல, ‘அதிகாரம் அல்ல, அன்பு’ புத்தகத்தில் இருந்து ‘சபை அறிந்து பேசு’, ‘நல்ல பெற்றோர்’, ‘பதினாறும் பெறு’ மற்றும் ‘உலகையே வெல்வோம்’ ஆகிய நான்கு கட்டுரைகளையும் நீக்கிவிட்டேன். காரணம், அதேதான். அதிகம் தெரிந்ததைச் சொல்லவேண்டாம் என்றுதான். இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்ட காலத்திற்கும் இப்போதைக்கும் இருக்கும் வேறுபாட்டைக்கண்டு வியப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இந்தக் காலத்து மக்களிடம் எத்தனையோ முன்னேற்றம்.
Release date
Ebook: 23 December 2021
Tags
English
India