Step into an infinite world of stories
Personal Development
'ஒரே டென்ஷனா இருக்கு. தலைவலி மண்டயப் பிளக்குது. சூடா ஒரு கப் காப்பி குடிச்சா தேவலை... ' இப்படி, நாமே ஒரு தடவையாவது சொல்லியிருப்போம். மற்றவர்கள் சொல்வதையும் கேட்டிருப்போம்.
அத்துடன், சாதாரண பள்ளிக்கூட மாணவர்களில் இருந்து உயர் பதவியில் இருப்பவர்கள் வரை, தங்களது இயலாமையை மறைத்துக்கொள்ள ஒரு காரணமாக இருப்பது தலைவலிதான். அதேபோல், மாமியார் - மருமகள், கணவன் - மனைவி, காதலன் - காதலி போன்ற தவிர்க்க முடியாத உறவுகள்கூட, விருப்பமில்லா நேரங்களில் தஞ்சம் அடைவது இந்தத் தலைவலியில்தான். ஆக, சமூகத்தில் வேறு எந்த வலிகளையும்விட தலைவலிக்கு என்று ஒரு ‘மரியாதை' இருக்கிறது. மனிதர்களாகப் பிறந்த நம் எல்லோருக்கும் ஏதோ ஒரு சூழ்நிலையில் தலைவலி ஏற்படுவது மிகச் சாதாரணமான ஒன்று. காரணமே இல்லாமல் வரக்கூடிய தலைவலிகள் உண்டு. தலைவலிக்கு இதுதான் காரணம் என்று சொல்லக்கூடிய வகையிலான தலைவலிகளும் உண்டு. எது எப்படி இருந்தாலும், தலைவலியா, அருகில் இருக்கும் மருந்துக் கடைக்குப் போய், ஏதோ ஒரு மாத்திரையை வாங்கிப்போட்டு அப்போதைக்கு தலைவலிக்கு தாற்காலிய நிவாரணம் தேடும் நிலையில்தான் பெரும்பாலான மனிதர்கள் இருக்கிறார்கள். இதில், ஏழை பணக்காரன்; படித்தவன் படிக்காதவன்; ஆண் பெண் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை, அப்போதைக்கு தலைவலியில் இருந்து விடுதலை பெற வேண்டும். இதில் இருந்துதான், அவர்களின் அறியாமை தொடங்குகிறது. இதில் ஆபத்து என்னவென்றால், உடனடி நிவாரணத்துக்கு எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள், மிகச் சாதாரணமான / எளிதில் குணமாகக்கூடிய தலைவலியாக இருப்பதை, மிகத் தீவிரமான தலைவலியாக மாற்றிவிடக்கூடும். அத்துடன், விரும்பத்தகாத வேறு பக்க/பின் விளைவுகளையும் ஏற்படுத்தி விடலாம். அத்துடன், எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற இயலாமையில் இருக்கும் மனிதர்களை, என்னிடம் தலைவலிக்கு நிவாரணம் / சிகிச்சை இருக்கிறது சொல்லி ஏமாற்றும் பேர்வழிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த வகையில், மக்களிடையே போதுமான விழிப்புணர்வும், எச்சரிக்கை உணர்வும் ஏற்பட வேண்டும். அதற்கு, தலைவலியைப் பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். வேண்டாத சிகிச்சை முறைகள், தேவையற்ற மருந்துகள், வாழ்க்கையின் நல்ல தருணங்களின் இழப்பு, திறமைகளின் வீச்சுக் குறைவு போன்றவற்றைத் தவிர்க்க, தலைவலி பற்றிய ஓர் ஆதாரபூர்வமான அறிவு நமக்குத் தேவை. ஆக, 'தலைவலி - பாதிப்புகளும் தீர்வுகளும்' என்ற இந்தப் புத்தகம், உங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக நிச்சயம் இருக்கும். இதில், மக்களிடையே மிக அதிகமாகக் காணப்படும் ஒற்றைத் தலைவலி எனப்படும் மைக்ரெய்ன், டென்ஷன் தலைவலி, நரம்பு மண்டலக் குறைபாடுகளால் ஏற்படும் தலைவலிகளைப் பற்றி விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. படித்துப் பயன்பெறுங்கள்.
Release date
Ebook: 14 July 2021
Tags
English
India