Step into an infinite world of stories
Fiction
என்னுடைய நாடகங்கள் பெரும்பாலும் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலேயே எழுதப்படுகின்ற கதைகளாகும் அல்லது உண்மை சம்பவங்களிலிருந்து ஒரு கற்பனை உதயமாகி அதை ஒரு கதை வடிவமாக்கி நாடகம் ஆக்குவது என் வழக்கம்.
இந்த தீர்ப்புக்கு பின் வழக்குத் தொடரும் நாடகமும் ஒரு நீதிமன்றத்தில் நடந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதாகும் இதுவும் ஒரு மர்ம கதைதான் இதில் ஒரு கொலையும் நடக்கிறது ஆனால் இதில் பெரிய சஸ்பென்ஸ் கிடையாது திகில் காட்சிகள் கிடையாது இது "ஏன் இந்த கொலை நடந்தது" என்ற வகையைச் சார்ந்து எழுதப்பட்ட ஒரு நாடகம். இந்த நாடகத்தை சென்னைத் தொலைக்காட்சி நிலையம் ஒரு ஒரு மணி நேர ஒளிப்படமாக தயாரித்து சில ஆண்டுகளுக்கு முன்னால் வெளியிட்டனர். இதில் பல பிரபலமான தொலைக்காட்சி நடிகர்கள் நடித்து இந்த நாடகத்திற்கு அழுகு சேர்த்தனர். இது ஒரு மர்ம நாடகம் என்பதற்கு மேலாக இது ஒரு அன்யோன்யமான தம்பதிகளுக்கிடையே நடக்கும் ஒரு உணர்ச்சி போராட்டமாகவும் இது பாராட்டப்பட்டது. இந்த நாடகம் பல நாடகப் போட்டிகளில் கலந்து கொண்டு விருதுகளை பெற்ற ஒரு நாடகம் ஆகும். படியுங்கள்!! படித்துவிட்டு உங்கள் விமர்சனங்களை எழுதுங்கள்! மேற்கொண்டு இந்த நாடகத்தை யாராவது நடிக்க விரும்பினால் எனக்கு ஒரு கடிதம் எழுதுங்கள். நன்றி வணக்கம்!!
- பாம்பே கண்ணன்
(bombaykannan@gmail.com)
Release date
Ebook: 3 January 2020
English
India