Step into an infinite world of stories
Fiction
அனைவருக்கும் குவிந்த என் கரங்களின் வணக்கங்கள்.
திருமதி. சிவானந்த விஜயலட்சுமி அம்மா அவர்களின் சொற்பொழிவுக்குத் தலைமை தாங்க அருட்செல்வரின் அன்புக் கட்டளையின்படி பொள்ளாச்சி சென்றிருந்த போதுதான் அருட்செல்வர் சொன்னார்கள்.
“என் தந்தையாரின் நூற்றாண்டு விழா வருகிறது. அவரின் வாழ்க்கை வரலாற்றை நீங்கள்தான் எழுதுகிறீர்கள்.”
பிரமித்துப் போனேன்.
நிமிர்ந்து பார்க்கும் பரந்த வானமும், படுத்துப் புரளும் பூமியும் சங்கமிக்கும் ஓரிடம்தான் தொடுவானம்.
தொட முடியாத எட்டத்தில் இருந்தாலும் தொடமுடியும் என்கிற நம்பிக்கையைத் தரும் தொடுவானக் கனவுகள்!
கனவுகள் நனவாகவேண்டும்.
அருட்செல்வர் அவர்கள் சிறப்பு ஆசிரியராக இருக்கும் சிறந்த பத்திரிகையான 'ஓம் சக்தி'யில் கதைகள், கட்டுரைகள் எழுதிய பரிச்சயத்தினால் அருட்செல்வர் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே என்கிற கவலை பிறந்தது.
வார்த்தைகளின் கோர்வை அல்ல கதைகள்.
வாழ்க்கையைப் பிழிவதுதான் கதை.
ஆனால், கதையெனும் கற்பனை வானில் பறந்த எனக்கு, அருட்செல்வரின் ஐயா அவர்களின் அற்புதமான வாழ்க்கை வரலாற்றை எழுதும் சந்தர்ப்பத்தைத் தந்தார்கள். ஆறு மாதங்களுக்கு முன் நிகழ்ந்த அற்புதம் இது.
உணர்வுகளின் நெகிழ்ச்சிதான் வாழ்க்கை
சீவிச் சீவி அறிவெனும் கத்தியால் இதய முனையைக் கூர்படுத்திக்கொண்ட அருட்செல்வரின் கட்டளை.
கூட்டினாலும், கழித்தாலும் பூஜ்யம் மாறுவதில்லை.
வாட்டினாலும், வதைப்பட்டாலும் நல்லவர்களின் மனத்தின் நிலை மாறுவதில்லை.
இந்த மாறாத கருணை மனம்தான் அருட்செல்வர் அவர்களின் தனிச்சிறப்பு.
வாழ்வின் நம்பிக்கை நேரங்களை நாம் கற்கலாம். கை கோர்த்து வாருங்கள். இதை வாசித்து அன்பு மனங்களை நேசித்து, மனித நேயங்களைச் சுவாசிப்போம்.
Release date
Ebook: 30 September 2020
English
India