Step into an infinite world of stories
‘யோகீஸ்வரர்’ என்று போற்றப்பட்ட ‘யாக்ஞவல்கியரின்’ வரலாறு இத்தொகுப்பின் முதல் பாகத்திலும், அவருக்கும் மிதிலையை ஆண்ட மன்னர் ஜனகருக்குமான உரையாடல்கள் இரண்டாம் பாகத்திலும், யாக்ஞவல்கியர் பிற முனிவர்களுடனும், வேத விற்பன்னர்களுடனும் நிகழ்த்திய விவாதங்கள் மூன்றாம் பாகத்திலும் இடம் பெற்றன. இந்த வரிசையில் இறுதி பாகமாக இந்த நான்காவது பாகத்தில், யாக்ஞவல்கியர் பல்வேறு சந்தர்ப்பங்களிலும், வெவ்வேறு விஷயங்கள் குறித்து எழுதியவை இடம் பெறுகின்றன. இந்த ‘யாக்ஞவல்கிய – ஸ்மிருதி’யானது, உலகாயத அறிவாற்றலைக் கொண்ட ஒரு மாமேதையின் கருத்துகளும், வரைமுறைகளும், சட்டதிட்டங்களும் உள்ளடங்கிய பெரும் புதையலாகும்! கண் இருக்கான நமது நாட்டு ‘ஹிந்து மதச்சட்டம்’ ‘பொது-நிர்வாக இயல் சட்டம்’ ‘சட்ட-இயல்’ ‘சட்ட-நிர்வாக இயல்’ ஆகியவை ‘யாக்ஞவல்கியர்’ ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நிறுவிச் சென்ற வரைமுறைகளையும், கோட்பாடுகளையும், சட்டதிட்டங்களையும் அடிப்படையாகக் கொண்டவையே என்பது குறிப்பிடத்தக்கது!
Release date
Ebook: 10 December 2020
English
India