Step into an infinite world of stories
"சித்தார்த்த கௌதமன் மெய்ஞானம் குறித்தத் தேடலில் தன்னுடைய வீட்டைவிட்டு வெளியேறி, இறுதியில் ஞானோதயம் பெற்று புத்தராக மாறிய கதை பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற முறை கூறப்பட்டு வந்துள்ளது. ஆனால், கண்போலப் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட சித்தார்த்தன் தன்னுடைய குடும்பத்தையும் சொத்துக்களையும் துறந்து தன்னுடைய வீட்டைவிட்டு வெளியேறிய நேரத்தில், ஒருசில நாட்களுக்கு முன்புதான் பிரசவித்திருந்த அவனுடைய இளம் மனைவியான யசோதரை ஏன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள் என்று நாம் ஒருபோதும் யோசிக்காமல் போனது ஏன்? ‘யசோதரை’ என்ற இந்நூலில், வரலாற்றின் இடைவெளிகள் முழுமையாகவும் உக்கிரமாகவும் கற்பனை செய்யப்பட்டுள்ளன: யார் அந்த இளம்பெண்? உலகைப் பற்றி அவள் கொண்டிருந்த கண்ணோட்டத்தை எது செதுக்கி வடிவமைத்தது? அவள் தன்னுடைய பதினாறாவது வயதில் சித்தார்த்தனை மணமுடித்தபோது, தன்னுடைய தாம்பத்திய வாழ்க்கை விரைவில் பெரும் மாற்றத்திற்கு உள்ளாகும் என்பதை அவள் அறிந்திருந்தாளா? வோல்காவின் இந்தப் பெண்ணியப் புதினத்தில் நாம் சந்திக்கின்ற யசோதரை, கூரிய சிந்தனை கொண்டவளாகவும் இரக்கவுணர்வு நிரம்பியவளாகவும் நமக்கு எதிர்ப்படுகிறாள். ஆன்மிகத் தேடலில் ஆண்களுக்கு சமமாகப் பெண்களும் பங்கு கொள்ளுவதற்கு வழிகோல அவள் விரும்புகிறாள். சித்தார்த்தன் புத்தராக மாறியதற்குப் பின்னால் இருந்த உண்மையான வலிமையாக யசோதரை இந்நூலில் வெளிப்படுகிறாள்."
Translators: Nagalakshmi Shanmugam
Release date
Audiobook: 6 June 2022
English
India