ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
4.5
எனக்குத் தெரிந்து கடந்த பத்தாண்டு காலத்தில் தமிழில் வெளிவந்திருக்கிற அதிகமான மொழிபெயர்ப்புத் தொடர் திரு.கோட்டயம் புஷ்பநாத்தினுடையதுதான். இதுவரை அவருடைய பதினான்கு தொடர்கள் வெவ்வேறு பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. சாவி, இதயம் பேசுகிறது, தமிழன் எக்ஸ்பிரஸ், பாக்யா, போலீஸ் செய்தி, என்று அந்தப் பத்திரிகைகளின் பட்டியல் நீளுகிறது. இவற்றில் அதிகமாக ஆறு தொடர்கள் வெளியாகியிருப்பது பாக்யா வார இதழில்தான். எனவே மேற்குறிப்பிட்ட பத்திரிகைகள் அனைத்திலும் எனக்கு வாய்ப்பு கிடைக்கக் காரணமாக இருந்த அந்தந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றிகள். கோட்டயம் புஷ்பநாத்தின் நாவல்களுக்குத் தமிழ் வாசகர்கள் தரும் ஆதரவு உண்மையில் மலைப்பையே ஏற்படுத்துகிறது. பல்கலை வல்லுநர் டி. ராஜேந்தர் அவர்களின் ‘உஷா’ பத்திரிகைக்காக மொழிபெயர்க்கப்பட்ட தொடர் இது. இதற்கான தலைப்பைச் சூட்டியவரும் அவர்தான். பல்வேறு காரணங்களால் தாமதமான இந்தத் தொடர், பத்திரிகை நின்று போனதால் நேரடியாகப் புத்தகமாகிறது.
மிகைப்படுத்தப்பட்ட சம்பவங்களும், அதீதமான செயல்களும் நமது இலக்கியப் பாரம்பரியத்தில் குறிப்பிடத்தக்க இடம் பெற்றுள்ளன. அத்தகைய சாகசக் கதைகளின் வரிசையில் நவீன காலகட்டத்தை இணைத்து எழுதப்பட்ட ஒரு நாவல் மோகினியின் சபதம். சாகசக் கதைகளின் காரணகர்த்தாக்கள் மேனாட்டு நாவலாசிரியர்கள்தாம் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. தமிழ் மொழியின் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் பெரும்பாலோர் இந்த முறையில் குறைந்தபட்சம் ஒரு சிறு கதையாவது எழுதவே செய்திருக்கிறார்கள்.
வாரந்தோறும் பத்திரிகை படிக்கும் வாசகர்களின் ஆவலைத் தூண்டும் விதமாகக் கதைகள் எழுதுவதும் ஒரு தனிக்கலைதான். அப்படி, ‘செம்பகம்’ மலையாள வார இதழில் ‘எழுந்நள்ளத்து’ என்ற பெயரில் நாற்பத்தியோரு வாரங்கள் தொடராக வந்தது இந்த நாவல். நாவலை மொழிபெயர்க்கவும், புத்தமாக்கவும், அனுமதி அளித்த ஆசிரியர் கோட்டயம் புஷ்பநாத், வெளியிடும் கலா நிலையம், வாங்கி ஆதரிக்கும் வாசகப் பெருமக்கள் ஆகியோருக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 15 กุมภาพันธ์ 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย