Step into an infinite world of stories
Non-Fiction
முதல், இடை, கடைச்சங்கம் நிறுவி தமிழை வளர்த்தவர்கள் பாண்டிய மன்னர்கள். இவர்களின் மூன்றாம் தமிழ்ச்சங்கம் இருந்தது தற்போதுள்ள மதுரையாகும். இம்மதுரை சங்க இலக்கியங்களில் இடம்பெற்ற நகரமாகும். மதுரையின் அருகே கீழடியில் சங்ககாலத் தமிழரின் வாழ்வில் பயன்படுத்தப்பட்ட அரிய பொருட்கள் இப்பொழுது நமக்குக் கிடைத்துள்ளன. இவற்றின் மூலம் சங்ககாலத் தமிழரின் நாகரிகம் பண்பாட்டினை நாம் அறிய முடிகின்றது. பலநூறு பொருட்கள் அகழாய்வில் கிடைக்கப்பெற்று நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இதனைப்பற்றி நண்பர் கவிஞர். இளங்கவின் தமிழரின் சங்ககாலப் பெருமை கீழடி என்ற நூலை தற்போது எழுதியுள்ளார். இவர் கீழடி அருகே கொந்தகையில் தலைமையாசிரியராய் பணிபுரிந்ததன் மூலம் இப்பகுதியை நன்கு அறிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் படைத்துள்ள இந்நூல் பல அரிய செய்திகளை நமக்குத் தொகுத்தளிக்கின்றது.
Release date
Ebook: 19 December 2022
English
India