Step into an infinite world of stories
History
மணவை பொன். மாணிக்கம் அவர்களின் ‘எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்.’ என்னும் இந்த இனிய நூலானது, நெஞ்சை விட்டு நீங்காத நிகழ்ச்சிப் பூக்களை நிறையக் குவித்து, உணர்ச்சி இழைகளால் ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்டுள்ள ஏற்றமிகு எழில் மாலையாகும்.
அன்று அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் மூளை, சிறுநீரகம் போன்ற அத்தனை உறுப்புகளும் அசைவற்றிருந்தாலும், எட்டாவது வள்ளலின் இதயம் மட்டும் எப்போதும் போலவே இயங்கிக் கொண்டிருந்தது. அதற்குக் காரணம், கோடிக்கணக்கான இதயங்களில் கொலு வீற்றிருந்த இந்தக் கோமானின் இதயம், அந்தக் கோடிக்கணக்கானவர்கள் குடியிருந்த கோவிலாகத் திகழ்ந்தது என்பது தான்! 'எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்.' என்று எத்தனைமுறை வேண்டுமானாலும் இனிக்க இனிக்கச் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
Release date
Ebook: 15 December 2023
English
India