Step into an infinite world of stories
Fiction
சிறுகதையின் பரிணாம வளர்ச்சி என்பது எங்கோ போய்க் கொண்டிருக்கிறது. அதற்கான யுத்தம் கலைஞர்களிடத்தும் வாசகர்களிடத்தும் தொடர்ந்து கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது.
நுணுக்கங்கள் பல நிறைந்தவை நம் வாழ்க்கைமுறை.
பொதுவாக, வாழ்தலின் அர்த்தம் புரிந்தவன்தான் கலைஞனாக இருக்க முடியும். அல்லது அதன் அர்த்தம் தெரிந்தவர்கள் தான் கலையாக வாழ்க்கையை வாழ்ந்துகாட்டவும் முடியும்.
அல்லாமலும் வெற்றுத் தோற்றத்தில் போலி ஆரவாரங்களோடு ஏதோ ஒரு முகமூடி போட்டுக்கொண்டு பிரமாண்டமான கதாமாந்தர்களையும் காட்சி வருணணைகளையும் கொண்டு கலை இலக்கியத் தளத்தில் அடுக்குகிற சொல்விளையாட்டுக்கள் எல்லாம் சமூகரீதியாக ஏற்படுத்தும் தாக்கத்தை உற்றுநோக்க வேண்டியுள்ளது.
இதோ இவர்களும் மனிதர்கள்தாம்!
எனது கதைகளின் மாந்தர்களைத்தான் சொல்கிறேன். இந்தத் தொகுப்புதான் என்பதில்லை. எனது ஒட்டுமொத்தத் தொகுப்பையும் உள்வாங்கி அலசி ஆராய்கிறவர்களுக்குத் தெரியும்.
தொலைந்துபோன வாழ்க்கையை மீண்டும் பெறவும் காணாமல் போன மனிதத்தன்மையை மீட்கவும், கிடைக்காமல் போன உரிமைகளைத் தட்டிக் கேட்பதுமான மனிதர்களும் அவர்கள் சார்ந்த வாழ்வும் கதைகளில் பரவலாக நிறைந்து கிடக்கும். இதன் காரணகர்த்தாக்கள் யார் என்பது ஒளிவு மறைவின்றி வெட்ட வெளிச்சமாய் அம்பலப்பட்டு நிற்பதையும் கதைகளினூடே காணலாம். இதில் ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்வின் நுணுக்கங்கள் பற்றியிருக்கிறது. எல்லாரிடமும் இடைவிடாத சோகம், ஏழ்மை, வறுமை... என ஏதோவொன்று வாழ்தலுக்காய் அன்றாடம் துரத்திக் கொண்டிருக்கும். எல்லாவற்றையும் உள்வாங்கிய இந்தச் சமூகத்தில் படைப்புச் செயல்பாடுகளின் வீர்யமும் வீச்சும் என்பதைச் சாதி, ஆதிக்க வேறுபாடுகளின்றி பார்ப்போமேயானால் நாம் திட்டவட்டமாய் அறிந்துகொள்ள முடியும். இது யாருக்கான வாழ்வு, யாருக்கான இலக்கியம், கலை வடிவங்கள் என்பதை வெகு எளிதாகவே உணர முடியும். இத்தகு வாழ்வின் நுண்ணிய பதிவுகள் தாம் இச்சிறுகதைகள் என்பதைப் பெருமையாக என்னால் அறிவிக்க முடியும்!
- விழி. பா. இதயவேந்தன்
Release date
Ebook: 18 December 2019
English
India