Step into an infinite world of stories
Crime
தனக்காக மட்டுமே வாழும் தியாகப் பெண்களுக்கு மத்தியில் தன் கணவனின் கட்டளையை ஏற்று, அவன் இறந்த பிறகும் அவனது குடும்பத்தை தன் தோளில், நெஞ்சில் சுமந்த ஒரு வினோதப் பெண்மணி! தனக்கென ஒரு குழந்தை இல்லாமல், தன் இரண்டு மச்சினர்களையும், மூன்று நாத்தனார்களையும் தன் குழந்தைகளாக பாவித்து கரை சேர்த்தவள்! கடமை முடிந்ததும், கடந்த காலத்துக்கே சென்று அவருடன் மானசீக வாழ்வு வாழ்ந்து, அந்த மனப் போராட்டத்தில் இனி இந்த பூமியில் வேலையில்லை என முடிவெடுத்து, அவருடன் ஐக்கியமானாள்! அந்த ரங்கநாயகி மீண்டும் வரப் போகிறாள்! சரி... யார் ரங்கநாயகி? யாரிந்த மடிசார் மாமி - 2.0? ரங்கநாயகிதான் கணவனுடன் வாழச் சென்று விட்டாளே!? ரங்கநாயகிக்கு, சுமந்து பெற்ற குழந்தையும் இல்லையே? பிறகு எப்படி? எல்லா கேள்விகளுக்கும் பதில் வரப்போகிறது! உங்களை சந்திக்க வருகிறாள் மடிசார் மாமி 2.0
Release date
Ebook: 13 September 2022
English
India