Step into an infinite world of stories
அருண் ப்ரீதிகாவைக் காதலித்து மணந்து கொண்டவன்.
திடீரென்று நடந்துவிட்ட இவன் திருமணத்திற்கு பிரிதொரு நாளில் அலுவலக நண்பர்களுக்கு விருந்து தர... லிஸ்டில் விடுபட்ட இவன் அலுவலக நண்பர் ஒரு நல்ல நாளில் கிப்ட் பார்சலுடன் வருகிறார்.
வந்த நண்பர் மூலம் ப்ரீத்திகா அருணுக்கு ஏற்கனவே திருமணமான உண்மையையும் ,ஒரு மகன் இருக்கும் விபரத்தையும் அறிந்து கோபமடைந்த ப்ரீதிகா டைவர்ஸ் வரை போகிறாள்.
அருணின் முதல் மனைவி மீனாட்சி தன் மகன் கரணுடன் தனித்து வாழ தன் மகனை அவன் கண்களிலேயே காட்டாமல் இருக்கிற கோபம் தம்பதிகள் மட்டுமே அறிந்த உண்மை.
இந்த மும்முனைப் போராட்டத்தில் ஆளுக்காரு பக்கமாகச் சிதறியடிக்கப்படுகின்றனர்.
ஒரு விபத்து இவர்களை இணைக்க அதற்கு தந்தி ஒரு காரணமாக வினோத் என்கிற வில்லனும் இடை நுழைய.... முடிவு என்னவாகிறது?
இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர்.
கரண் தன் தந்தையைப் பார்க்கிறானா?
ப்ரீதிகாவின் டைவர்ஸ் கேஸ் என்னவானது?
மீனாட்சி தன் கணவனை மன்னித்தாளா?
இடையில் புகுந்த வினோதுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்?
நாவலில் பல சுவாரசியத் திருப்பங்கள்.....படித்தால் ரசிப்பீர்கள்...
படியுங்கள்
Release date
Ebook: 18 May 2020
English
India