Step into an infinite world of stories
Fiction
விஞ்ஞானி ராம்னாத் கண்டுபிடித்த 'Time Capsules' மாத்திரையை விழுங்கி தயாரிப்பாளர் தர்மராஜன் எழுத்தாளர் ஏகலைவன், ஹீரோயின் சம்பாதேவி மூவரும் மாயமாக மறைகின்றனர். கட்ட பொம்மனின் ஆட்சி காலத்திற்கு வரும் அவர்கள் நடக்கப் போவதை முன்கூட்டியே சொல்வதால் அவனது ராஜகுருவாகி சரித்திரத்தையே மாற்றி எழுத முயல எட்டப்பன் இவர்களை காட்டிக் கொடுக்க கட்டபொம்மன் மூவருக்கும் தூக்குத்தண்டனை வழங்குகிறான்.
மீண்டும் மாத்திரையை விழுங்கி ஷாஜகானை சந்திக்கும் மூவரும் தாஜ்மகாலில் உள்ள சமாதியை இடித்து விடும்படி கூற ஷாஜகான் அவர்களை எண்ணெய் கொப்பரையில் போடச்சொல்கிறான், மீண்டும் மாத்திரையை விழுங்கி சகுனியையும், துரியோதனனையும் மங்காத்தா எனும் சீட்டாட்டத்தில் தோற்கடித்து அவர்களை அடிமையாக்க, கடவுள் கிருஷ்ணனின் ஆணைப்படி காணாக பிரும்மாஸ்திரத்தை விடுகிறான், மாற்று மருந்து கிடைத்த ஏகலைவன், தர்மராஜன் அதை அதிகமாக விழுங்க 4994ம் வருடத்திற்கு சென்று பின் திரும்பி வருகிறார்கள். இது ஒரு சமூகே. பரான, இதிகாச, விஞ்ஞான நகைச்சுவை நாடகம்
Release date
Ebook: 22 November 2021
English
India