Step into an infinite world of stories
“அவனவன் என்ன டென்ஷனோட போயிட்டு இருக்கான். ஏற்கனவே லேட் ஆச்சுங்கற கடுப்பு. துரைக்கு டீக்கடை கேட்குதா?” என்று மகனின் தொடையில் நறுக்கென்று கிள்ளினார் கர்ணா.
“ஆ...” என்று அலறியவன், “இதுக்கு நான் ஆந்திராவுக்கு அடிமாடா போயிருக்கலாம். டென்ஷன் ஆகறதுக்கு இதுல என்ன இருக்கு? யுத்தத்துக்கா போறோம்? வெறுமனே அந்தப் பொண்ணையும், குடும்பத்தையும் எச்சரிக்கை செய்யத்தானே இதை போன்ல கூடச் சொல்லியிருக்கலாம். நம்ம செலவுல வண்டி போட்டுட்டு போகலேன்னா என்ன? வெட்டி வேலை! தண்டச் செலவு!” என்று தைரியமாகப் புலம்பத் தொடங்கிவிட்டான் சிவா. “அப்படியே போன்ல சொல்லி இவங்க கேட்டுட்டாலும்! வளைச்சு போட எவன் கிடைப்பான்னு...” என்று ஆரம்பித்த கங்காதரன், தன்னருகே டிரைவர் இருப்பதை உணர்ந்து, அத்தோடு அந்த விஷயத்தை நிறுத்திக் கொண்டார்.
Release date
Ebook: 3 March 2023
English
India