Step into an infinite world of stories
மழைக்கால மல்லிகைகள் நாவலில் வரும் கல்யாணி, சந்திரா இவர்களும் இதற்கு உதாரணம். அனும்மாவுக்கு இசையிலும், நடனத்திலும் மிகுந்த ஈடுபாடு. இசை, நாட்டியம் சம்பந்தப்பட்ட கதையென்றால் கேட்கவே வேண்டாம். அது ஸ்பெஷல் கதையாகவே அமைந்துவிடும். ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் காட்சிக்குத் தகுந்தபடி ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர், பாபநாசம் சிவன், பாரதியார், கண்ணதாசன் இவர்களின் பாடல் வரிகள், நாட்டுப் பாடல்கள் எனப் பொருத்தமாக உபயோகித்திருப்பது இந்தக் கதைக்கு மேலும் மெருகூட்டுகிறது.
சிறிது நேரமே வந்தாலும் நம் மனதில் இடம் பிடிக்கும் முகுந்தன், மற்றும் கனகசபை, ரங்கமணி, சுந்தரம் போன்ற விதவிதமான கேரக்டர்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து, அலுப்பு தட்டாமல் கதையை கொண்டு செல்லும் நேர்த்தி.
Release date
Ebook: 2 February 2023
English
India