Step into an infinite world of stories
அழகிய வானத்தில் பரிதி பளபளப்போடு சுடர் விட்டுக் கொண்டிருக்க, எல்லாம் இயல்பாக, முறைப்படி இயங்கிக் கொண்டிருக்கும் வேளையில் -
திடீரென்று ஒரு காற்று அடிக்கிறது.
நெடிதுயர்ந்த மரத்தின் உச்சாணிக் கிளையிலிருந்த வண்ணப் பூ கழன்று குப்பைத் தொட்டியில் இறங்குகிறது.
புழுதியில் சுருண்டு கிடந்த ஒரு சருகு குபீரென்று மேலே தூக்கப்பட்டு, தொலைக்காட்சிக் கோபுரத்தின் சிகரத்தில் கொண்டு சேர்க்கப்படுகிறது.
மொட்டை மாடியில் கொடியில் உலர்ந்து கொண்டிருந்த 'பிரா' பறந்து பக்கத்து வீட்டில் விழுகிறது, அதன் விளைவாக அந்த வீட்டு வாலிபனுக்கும் இந்த வீட்டுப் புறாவுக்கும் இடையில் ஓர் 'இது' உண்டாகிறது.
கண்காட்சிக்குச் சென்று தாத்தாவுடன் திரும்பிக் கொண்டிருக்கும் குழந்தையின் கையிலிருந்த பலூன் நழுவிச் செல்ல, அதைப் பிடிக்கக் குழந்தை சாலையில் இறங்க, அந்த வழியாகப் பேருந்தைச் செலுத்தி வந்து கொண்டிருக்கும் ஓட்டுனரின் கண்ணில் தூசி விழுந்து அவர் பார்வையை மறைத்து விடுகிறது.
காற்று வேண்டுமென்றே இப்படியெல்லாம் செய்கிறதா? அல்லது -
அதுவும் சந்தர்ப்பச் சேர்க்கையினால் உந்தப்பட்டு, தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ளும் சக்தியை இழந்து, பலன்களை உணராமல், அல்லது உணர்ந்தும் அவற்றைத் தவிர்க்க முடியாத நிலையில், கன்னாபின்னாவென்று நடந்து கொள்கிறதா?
அல்லது எல்லாவற்றுக்கும் பின்னால் ஒரு சட்டம் இருக்கிறதா?
தெரியவில்லை.
இந்தக் கதையின் நாயகனுக்கும் நாயகிக்கும் கண்டிப்பாகத் தெரிந்திருக்க முடியாது.
அவன் பெயர் யோகு. சாதாரண வேலையிலிருக்கும் சாதாரண இளைஞன். அவள் பெயர் இளமதி.
வேறு யார் வாழ்க்கையிலோ என்ன என்னவோ நிகழ, அதன் தொடர்பாக யோகுவுக்கு ஒரு முக்கிய பதவி-பதவி என்பதைக் காட்டிலும் பொறுப்பு என்றால் பொருத்தமாக இருக்கும்-வந்து வாய்க்கிறது.
உயர் பதவி, தனியே வரவில்லை. ஆபத்தையும் அழைத்து வந்திருக்கிறது.
அந்தக் கதைதான் இது.
- எஸ்.ஏ.பி.
Release date
Ebook: 30 September 2020
English
India