Step into an infinite world of stories
3.7
Short stories
ஒன்பது குழி நிலம் வீண் வழக்கால் விளையும் பகையை விளக்கும் கதை. கமலாபுரம் சீனிவாசம்பிள்ளை, கல்யாணபுரம் சோமசுந்தரம் பிள்ளை ஆகிய இருவர் வயலுக்கும் இடையே உள்ள ஒன்பது குழி நில உரிமை பற்றிய சண்டை. வேலையாட்கள் சுப்பன் சின்னப்பையல் ஆகியோர் வத்தி வைக்க, கோர்ட்டில் வழக்காடுகின்றனர். "ஒன்பது ரூபாய் பெரும் ஒன்பது குழி நிலத்திற்காக நாம் 16,000 ரூபாய் தொலைத்தோம். அவர்களும் தொலைத்திருப்பார்கள். தீராப்பகை உண்டாக்குகிறது. மோட்டார், பெட்ரோல், மருந்து மூலமாக அந்நிய நாடுகளுக்கு பணம் போகிறது" என்று வெற்றி பெற்ற பிள்ளை கூறி வருந்துவது மூலம் மக்களுக்கு அறிவுரை வழங்குகிறார் கல்கி. சோமசுந்தரம் மகள் ஆற்றில் அடித்து வர அவளை ஸ்ரீனிவாசன் மகன் காப்பாற்ற இரு குடும்பமும் சேர்ந்தன என்ற இனிதான முடிவு.
Release date
Audiobook: 20 May 2023
English
India