Vaanathi.
12 Aug 2022
காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் ஆறாவது ஒலி புத்தகத்தை கேட்டு பிரமித்துப் போய்விட்டேன்.காலச்சக்கரம் ஆச்சர்யம்சங்கதாரா ரகசிய தாய்மைரங்கராட்டினம் அரங்கன் உலாகர்ண பரம்பரை கரணி இரகசியம்அத்திமலை தேவன் பாகம்-1 சாணக்கிய நீதிபஞ்ச நாராயண கோட்டம் இவை அனைத்திற்குமே முத்தாய்ப்பான பிரம்மிப்பூட்டும் ஹொய்சால நாட்டின் அரசியல் சூழ்ச்சிகளின் உறைவிடம்.ஆயிரம் ஆண்டு பழமையான தெரிந்து கொண்டே ஆக வேண்டிய கதை.கதை சொன்ன நேர்த்தி நரசிம்மா அவர்களின் தனி முத்திரை.குழுவினரின் மனமுவந்த உழைப்பு இந்த பதிவினில் தெரிகிறது.ஒற்றை அல்லது இரண்டு குரல்களில் கதை கேட்டு வந்த நான், ஒரு குழுவாக பதிவிட்ட இந்த கதையை கேட்ட பொழுது பிரமித்துப் போய்விட்டேன்.ஆங்கிலத்தில் சொல்வது போல் ஒன்ஸ் இன் life-time எக்ஸ்பீரியன்ஸ் என்றே சொல்லத் தோன்றுகிறது இவர்களின் இந்த உழைப்பு, இந்த படைப்பு. கலைஞர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.