Step into an infinite world of stories
Fiction
மனைவியை இழந்த தன் அண்ணன் ராஜேந்திரன் ஒற்றை மகனை அழைத்துக் கொண்டு துபாய் செல்ல முயல, அவன் மகன் கோபியைத் தானே வளர்ப்பதாய்ச் சொல்லி தன்னுடனே வைத்துக் கொள்கிறாள் ராஜாத்தி. அவளும், அவள் கணவன் மேகநாதனும் கோபி பெரியனானதும் அவனையே தன் மகள் சங்கமித்ராவிற்குத் திருமணம் செய்து விடலாம், எனவும் தீர்மானிக்கின்றனர். அதை அவர்கள் வெளிப்படையாகவே சொல்ல, கோபியும் அதே கனவோடு வளர்கிறான்.
ஆனால், பல வருடங்களுக்குப் பிறகு., இளம் யுவதியான சங்கமித்ரா ஒரு இளைஞனை அழைத்து வந்து, அவனைத் தன் காதலன் என கோபியிடமே அறிமுகப்படுத்தி, தங்கள் காதலுக்கு உதவச் சொல்கிறாள்.
சோகத்தை உள்ளே வைத்துக் கொண்டு அவர்களிருவரையும் இல்லற வாழ்வில் இணைத்து வைக்கிறான் கோபி. ஆனால், பல பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்யும் “கல்யாண மன்னன்” அவன் என்பது தெரிய, பைத்தியக்காரியாய் தெருவில் திரிகிறாள் சங்கமித்ரா. அவளை எதேச்சையாக சந்தித்த கோபி, வீட்டிற்கு அழைத்து வருகிறான்.
தொடர்ந்து அந்தக் குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகளை எளிய நடையில் எழுதியுள்ளார் கதாசிரியர். இக்கதை பெண்களால் அதிகம் விரும்பப்படும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
Release date
Ebook: 18 May 2020
English
India