Step into an infinite world of stories
சங்க இலக்கியங்கள் வீரத்தையும் காதலையும் பெரிதும் போற்றின. பெயர் தெரியாத ஒருவன்- ஒருத்தியின் காதலையும், தாபத்தையும் நுணுக்கமாக விளக்கிப் பாடின. மன்னர்களின் வீரத்தைப்பாடிப் பரிசில்பெற்ற புலவர்கள் பலர். சங்க இலக்கியத்திற்குப் பின் இலக்கியவளர்ச்சியில் பக்தி இலக்கியங்கள் பெருமளவில் உருவெடுத்த காலத்தில் இவ்வாறு பாடப்பட்ட காதல் இறைவனிடம் மனிதன் கொண்ட அன்பாக வெளிப்படுத்தப்பட்டது. இறைவனை (இறைவியையும்) தந்தையாக, தாயாக, துணையாக, குழந்தையாகவெல்லாம் உருவகித்துப்பாடி மனிதன் தனது தீராதகாதலை (அன்பை) வெளிப்படுத்தியதன் விளைவே தேவாரம், திருவாசகம், திவ்வியப்பிரபந்தம், இன்னும் பல சிற்றிலக்கியங்கள் முதலியன. சிறுவர்கள் விளையாட்டுகளிலும், மகளிர் பொழுதுபோக்க வீடுகளில் விளையாடும் அம்மானை, பல்லாங்குழி விளையாட்டுகளிலும், தானியங்களைப் புடைத்துக் கல், மண் நீக்கும் வேலைகளிலும், நீண்ட சமையல் வேலைப்போதுகளிலும் பாடல்களைத் தாமே இயற்றிப் பாடினர். இவை சமூக, வீட்டு நிகழ்வுகளையும், இயற்கை பற்றிய கருத்துக்களையும் கொண்டிருந்தன. அவைகளை நாம் அறியலாம்... வாருங்கள்...
Release date
Ebook: 5 January 2022
English
India