Step into an infinite world of stories
Personal Development
கடவுள் அருளால் எல்லா வளமும் அமையப் பெற்றிருந்தாலும் திருப்திப்படாமல் எதிலும் மனநிறைவு கொள்ளாமல் உற்சாகம் இழந்து சோர்ந்து காணப்படுபவர்களும் இருக்கிறார்கள். இருப்பதில் இன்பம் கண்டு, கிடைக்கப் பெற்றதில் நிறைவு கண்டு எப்போதும் உற்சாகமாக ஊக்கமுடன் வாழ்பவர்களும் இருக்கிறார்கள். 'உற்சாகம்' என்பது எப்போதும் தன்னைச் சுற்றி உள்ளவர்களைத் தொற்றிக்கொள்ளக்கூடிய ஒன்று. வீட்டில் ஒருவர் உற்சாகத்துடன் கலகலப்பாக செயல்பட்டால்கூட நிச்சயம் அது அந்த வீட்டு அங்கத்தினர்கள் அனைவரையும் தொற்றிக் கொண்டு அந்த வீட்டையே களிப்புக் கடலில் ஆழ்த்திவிடும்.
ஒரு வேலையாகட்டும், பிரச்சினையாகட்டும் உற்சாகத்துடன் அதை அணுகும் போது அந்த வேலைப்பளு பாதி குறைந்துவிட்டது போலத் தோன்றும். உற்சாகமின்றி ஒருவித மலைப்புடன் அதை அணுகும்போது அதே வேலை இரட்டிப்பு பளுவுடன் தோன்றும். இந்த உற்சாகத்தை எங்கும் விலை கொடுத்து வாங்க முடியாது. அவரவர் உள்ளத்தில் சுய முன்னேற்ற சிந்தனை மூலம் ஊற்றெடுக்கச் செய்யலாம். ஒருவரது முன்னேற்றத்தின் தடைக்கற்களாக இருப்பவை உற்சாகமின்மை, சுறுசுறுப்பின்மை, முயற்சியின்மை போன்ற சில இன்மைகளே. ஒரு குறிக்கோளை மனதில் கொண்டு முயற்சியுடன், குறிப்பாக உற்சாகத்துடன் வெற்றிப்படிகளில் ஏறத் தொடங்குங்கள். கூடிய விரைவில் நீங்கள் சாதனைச் சிகரத்தைத் தொட்டு சாதனையாளராக உலகத்தவர் முன் புகழ் மாலை சூட்டப்படுவீர்கள். இது உறுதி.
எனது சுயமுன்னேற்ற நூல்களைப் படித்து அன்புடனும் ஆர்வத்துடனும் எனக்குக் கடிதங்கள் எழுதி மேலும் மேலும் எழுதத் தூண்டும் வாசகர்களுக்கு என்றென்றும் நன்றி! வணக்கம்!
கீதா தெய்வசிகாமணி
Release date
Ebook: 30 September 2020
Tags
English
India