Step into an infinite world of stories
History
Vendrargal Nindrargal - Tamilnaattu Thozil Niruvanangalin Vetri Kathaigal - A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store கோடிக்கணக்கில் பணம் இருந்தால்தான் தொழில் தொடங்கி வெல்ல முடியும் என்பது பொதுப்புத்தி. ஆனால், தொழில் நிறுவனங்களின் வெற்றிக் கதைகள் சொல்வதோ, வெற்றிக்குத் தேவை பணம் அல்ல, ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பு என்பவற்றைத்தான். பல தொழிலதிபர்கள் வெறும் ஆயிரம் ரூபாய் மூலதனத்தில் தொழில் தொடங்கி, கோடிக் கணக்கில் வியாபாரம் செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட வெற்றிக் கதைகளைப் படம் பிடிக்கிறது இந்தப் புத்தகம். தமிழ்நாட்டில் இத்தனை தொழில் நிறுவனங்கள் இருந்தனவா என்ற ஆச்சரியத்தைத் தருகிறது இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் நிறுவனங்களின் பட்டியல். இந்தியத் தொழில்முனைவோர்கள் பேசப்பட்ட அளவுக்கு தமிழ்நாட்டுத் தொழிலதிபர்கள் அதிகம் பேசப்படவில்லை என்னும் குறையைக் குறைக்கும் வகையில் இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார் ஜெயராமன் ரகுநாதன். தொழிலில் வென்றவர்களின் கதைகளோடு, வெல்லப் போராடியவர்கள் மற்றும் இன்றைய புதிய முகங்களைப் பற்றியும் ஆசிரியர் சொல்வதால், தமிழ்நாட்டுத் தொழில்துறை பற்றிய வரலாற்றுப் பார்வையையும் இந்தப் புத்தகம் தருகிறது என்பது இந்த நூலின் கூடுதல் சிறப்பு. எழுத்தாளர் ஜெயராமன் ரகுநாதன்.எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
© 2025 itsdiff Entertainment (Audiobook): 9798318207822
Release date
Audiobook: 25 May 2025
English
India