Step into an infinite world of stories
பொன்னுரங்கம் அவ்வூரின் பெரிய மனிதர். அரிசி ஆலை, கல்யாண மண்டபம், ரியல் எஸ்டேட் பிசினஸ், என பல தரப்பட்ட வியாபாரங்களைக் கையிலெடுத்துக் கொண்டு அனைத்திலும் வெற்றிக் கொடி நாட்டி, கோடிகளைக் குவிக்கும் கோமகன். ஆனால், “பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை” என்ற வார்த்தைகளை மெய்ப்பிப்பது போல் ஈகை குணம் சிறிதுமில்லாதவர். ஏழைகள் படும் வதைகளைக் கண்டு மனமிரங்காதவர். பெங்களூரில் ஐ.டி.நிறுவனத்தில் பணி புரியும் அவர் மகள் கீர்த்தனா கொரோனா காரணமாய் சொந்த ஊருக்கு வருகிறாள். வந்த இடத்தில் தந்தையின் வில்லத்தனங்களை அறிந்து மனம் நொந்து அவரைத் திருத்தும் முயற்சியில் இறங்குகிறாள்.
அதே நேரம், அதே கொரோனா காரணத்திற்காக தன் சொந்த ஊருக்குச் சென்றிருந்த அவள் காதலன் இளங்கோ, அங்கு வேறொரு பெண்ணை மணமுடிக்கும் சூழ்நிலை உருவாகின்றது. அதை அறியாத கீர்த்தனா அவனைத் தேடி அவனது சொந்த ஊருக்கு வருகிறாள். கீர்த்தனா தன் தந்தையைத் திருத்தினாளா? கீர்த்தனா தன் காதலனுடன் சேர்ந்தாளா? நாவலைப் படியுங்கள்…
Release date
Ebook: 19 December 2022
English
India