Step into an infinite world of stories
திவ்யாவை பெண் பார்க்க வருகிறான் அபிஷேக். முதலில் வேண்டாம் என்பதும் பின் வேண்டும் என்பதும்... அதற்கான காரணங்களும்... என் ஒரு அழகான காதல்... காதல் மட்டுமே ஆன கதையும்... திவ்யாவின் தோழி பூர்ணா இன்றைய இளம் பெண்களுக்கே உரிய நாகரீகங்கள் என்னும் பெயரால் சீரழியும் வாழ்வை எப்படி சரி செய்து கொண்டாள்... என்று ஒரு புரட்சிகரமான போக்கையும் சில்வியா என்னும் திவ்யாவின் உடன் பணியாற்றும் தோழியின் கணவன் பாதை தவறி செல்லும்போது அவள் அந்த காலக்கட்டத்தைக் கையாண்ட அனுபவத்தையும் ஆரோக்கியம் என்னும் பெண்ணின் கல்லானாலும் கணவன் என்னும் வாழ்வியலும் அவனுக்கு ஒரு கஷ்டம் வரும்போது அவளின் மனிதாபிமானமும் எல்லாவற்றுக்கும் மேலாக திவ்யாவின் அக்கா ரம்யாவின் திருமண வாழ்வின் குளறுபடிகள் அதை அவள் கணவன் சரி செய்த விதமும் இதன் ஊடாக ஷீலா என்னும் உறவினரின் உதவிகளும்... மற்றவற்றை கதையில் படித்து தெரிந்து கொள்வோம்.
Release date
Ebook: 26 March 2024
English
India