Step into an infinite world of stories
Fiction
நிக்கோலோ மச்சிவெல்லி (3 மே 1469-21 ஜூன் 1527) மறுமலர்ச்சிக் காலத்தில் வாழ்ந்த இத்தாலியத் தூதர், எழுத்தாளர், தத்துவவாதி, வரலாற்றாசிரியர் மற்றும் அரசியல் ஆர்வலர். 1513-ஆம் ஆமாண்டில் எழுதப்பட்ட அவரது அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு 'தி பிரின்ஸ்' மிகவும் பிரபலமானது, ஆனால் 1532 வரை வெளியிடப்படவில்லை. அவர் 'நவீன அரசியல் தத்துவம் மற்றும் அரசியல் அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். 'தி பிரின்ஸ்' புத்தகத்தில் அரசியல் தொடர்பான பல கருத்துகள் உள்ளன. இது ஒரு புதிய அரசனை உருவாக்கும் கவனத்தைச் செலுத்துகிறது (தற்கால சூழலில் புதிய நிறுவனங்கள் என நாம் புரிந்து கொள்ளலாம்). அதிகாரத்தைத் தக்கவைக்க, பல்வேறு நிறுவனங்களின் நலன்களைக் கவனமாகக் சமநிலைப்படுத்த வேண்டும். இதற்கு நேர்மாறாக, ஒரு புதிய அரசனுக்கு ஆட்சி புரிவதில் மிகவும் கடினமான பணி உள்ளது. நீடித்த அரசியல் கட்டமைப்பைக் கட்டியெழுப்ப அவர் முதலில் தனது புதிய அதிகாரத்தை உறுதிப்படுத்த வேண்டும். தார்மீக ஊழலை எதிர்கொண்டு சமூக நன்மையையும் அதன் பாதுகாப்பையும் அடைய முடியும் என்று மச்சியாவெல்லி உணர்த்தியுள்ளார். மச்சியாவெல்லி, பொது சமூக அறநெறிகளையும் மற்றும் தனிமனித அறநெறிகளையும் வெவ்வேறாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ளார். இதன் விளைவாக, ஒர் ஆட்சியாளர் நற்பெயரை நிலைநாட்ட அதிகம் உழைக்க வேண்டும். ஆனால் சரியான நேரத்தில் தந்திரமான முறையில் செயல்படவும் தயாராக இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்தியுள்ளார். மச்சியாவெல்லியின் 'தி பிரின்ஸ்' கோட்பாடுகள் இன்றும் பொருந்தும்.
Release date
Audiobook: 20 March 2025
Tags
English
India