Step into an infinite world of stories
Romance
அன்புள்ள உங்களுக்கு....
வணக்கம்! வெறும் வசனங்களை மட்டும் பயன்படுத்தி, வர்ணனைகளே இல்லாமல் ஒரு சிறுகதையில் முயன்று பிறகு பல நாவல்களே எழுதி இருக்கிறேன்... ஒரு தொடர்கதை உள்பட!
முழுக்க ஒரே ஒரு கடிதத்தையே நாவலாக்கி இருக்கிறேன், அதைப் போல், 'ஒரு காதலனும், காதலியும் தங்களுக்குள் எழுதிக்கொள்ளும் சில கடிதங்களை மட்டுமே வைத்து ஒரு கதை எழுத முடியுமா?' என்று யோசித்தேன். அதன் விளைவுதான் 'ஆயிரம் முத்தங்களுடன்...'
இந்தக் கதையில் காதலுக்கு எதிரி என்று ஜாதியையோ, மதத்தையோ, அந்தஸ்தையோ சொல்லாமல் வேறு ஒன்றைக் கொண்டு வந்து அவர்கள் நடுவில் நிறுத்தினேன்.
அது என்ன என்பதை இங்கே சொன்னால் சுவாரசியம் கெட்டுவிடுமே! எனவே, படியுங்கள். தெரிந்துகொள்ளுங்கள். இதுவும் காதலுக்கு முக்கியமான எதிரிதான் என்று நிச்சயம் ஆமோதிப்பீர்கள்...
Release date
Ebook: 3 January 2020
English
India