Step into an infinite world of stories
Fiction
நந்தவனத்தில் மரங்களும் செடிகளும் பல வண்ணப் பூக்களுடன் திகழும் பூஞ்சோலையை காணலாம். அந்த நந்தவனத்தில் குயில்கள் பாடும்; மயில்கள் ஆடும்; மான்கள் துள்ளி ஓடும்; கிளிகள் மழலை பேசும்; புறாக்கள் கொஞ்சி முத்தமிடும் கட்சிகளைக் காணலாம்.
ஆசிரியர் அவர்கள் தமிழன்னையின் காலடியில் அவர் காணும் கனாக்களின்கட்டுரை நந்தவனத்தில் அழகு தமிழ் மொழியின் தொன்மையை, உலகின் மூத்த மொழியென விளங்கி தான்பெற்ற திராவிடமொழிகளின் தாய்மையை, பெருமையை, ஆற்றலை, செம்மொழியால் விளையும் கருத்து கருவூலங்களை, அறிவுறுத்தும் அறிவியல் சிந்தனைச் செல்வங்களை, வாழ்வியல் பகுத்தறிவுபோன்ற பலவற்றை நாம் உணரலாம்.தேனருவியை பருகலாம்.
”வாழும் வரை போராடு”, ”உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்”, ”வாழ்க்கை”, ”சிகரங்கள்….சாதனைகள்”….போன்ற கட்டுரைகள் உணர்த்துவதும் அதுவே. "நிலையற்ற வாழ்க்கையில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும், நிலையான புகழையும் தேடு" என்பதையே கவியரசு கண்ணதாசன் உணர்த்துகிறார்.
Release date
Ebook: 19 March 2025
Tags
English
India