Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
“கங்கையாய் மாறிய கிணறு “ என்னும் கவிதைத் தொகுப்பு கவிஞர் ஆதித் சக்திவேல் அவர்களுடைய மூன்றாம் கவிதைத் தொகுப்பாகும் “நொய்யலின் நினைவுகள்”, “தாழப் பறந்த விமானம்” ஆகிய இரு கவிதைத் தொகுப்புகளை ஏற்கனவே அவர் வெளியிடுள்ளார்.உரைநடைக் கவிதை அல்லது வசன கவிதை (Prose Poetry)என்னும் வகையைச் சார்ந்தவை இவரது கவிதைகள்.
இந்திய விடுதலைக்கு முன்பு, நாற்பதுகளில், தாழ்த்தப்பட்டோர் ஊர்க் கிணறுகளில் குடி நீர் எடுக்க பட்ட வேதனைகள், அவமானங்கள், கொஞ்சமல்ல.தொகுப்பின் தலைப்பான "கங்கையாய் மாறிய கிணறு"என்ற முதல் கவிதை பொதுக் கிணறுகளை ஒடுக்கப்பட்ட மக்கள் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்ட, தீண்டாமைக் கொடுமைகள் தலை விரித்தாடிய கொடுங்காலத்தில், தமிழ்நாட்டின் சிற்றூர் ஒன்றில் தன் சொந்தக் கிணற்றை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அர்ப்பணித்த ஒரு மாமனிதனைப் பற்றிய கவிதை. தன் கிணறு வறண்ட போது தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தண்ணீர் கிடைக்காதே என அந்த மனிதர் தவிப்பதையும், கிணற்றில் தண்ணீர் ஊற எடுக்கும் முயற்சிகளையும், கிணற்றில் மீண்டும் தண்ணீர் துளிர்த்தவுடன் படுத்த படுக்கையாய் கிடந்த அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்குவதையும் தத்ரூபமாக வடித்திருக்கிறார் கவிஞர்.
மற்றும் நிற வேறுபாடுகளால் கறுப்பின மக்கள் அமரிக்காவில் படும் துன்பங்கள், அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.“அமெரிக்காவே அவமானமாக இல்லையா?” என்ற இனவெறி, நிறவெறி கொண்ட ஏகாதிபத்தியத்தின் முகத்தில் அறைகிற,. ஜார்ஜ் ஃப்ளாய்டு குறித்த கவிதையை வாசகர்கள் கண்ணீரோடுதான் கடக்க முடியும்.
ரஷ்ய – உக்ரைன் போரில் சிக்குண்டு தவிக்கும் மக்களின் துயரத்தை ரத்தமும் சதையுமாகத் தீட்டியுள்ளார் கவிஞர். ஒவ்வொரு வரியையும் வாசிக்கும் போது நம் மனம் வேதனையில் விம்மி விம்மி வெடித்துச் சிதறுகிறது.
மியான்மெரிலிருந்து இனப்படுகொலைக்கு தப்பித்து வங்கதேசத்திற்கு அகதிகளாக வந்த ரோஹிங்கிய முஸ்லிம்களின் வேதனைகளை படம் பிடித்துக் காட்டும் கவிதை. “வரையாத சித்திரம் பேசியது” என்ற கவிதை.அக் கவிதையை வாசிக்கும் போது நம் மனம் பதை பதைக்கிறது.
மேலும் இன்றைய சூழலில் இணைய வழிக் கல்வியால் குழந்தைகள் படும் இன்னல்கள்,குழந்தைகளுக்கு பகல் நேரச் சிறைச்சாலையாய் மாறிப் போன பள்ளிகள்,பிறக்கும் குழந்தையின் முதல் அழுகை இன்னிசையாய் ஒலித்தல்,அப்பாவின் சாம்பலை நொய்யலில் கரைக்கச் சென்ற மகனது மனநிலை,பெற்றோர் இருவரும் பணிக்குச் சென்று விட தாதியிடம் வளரும் அமெரிக்கக் குழந்தை ஒன்றின் வேதனை நிலை,கல்லறையாய் மாறிய எட்டு வழிச் சாலைகள்,கணவன் கொரானாவால் இறந்த பின் மனைவியின் மன நிலை,நினைவேக்கம்(Nostalgia), நாட்குறிப்பு போன்றவற்றை மையக் கருவாகக் கொண்டு எழுதப்பட்ட கவிதைகள் இத்தொகுதியில் உள்ளன..
மேலும் தொகுப்பிலுள்ள கவிதைகளின் ஊடாக நீர்மையும், பச்சையமும், அமைதியும், இயல்பு வாழ்க்கையும் என சமூகத்தின் அனைத்து நல் வினைகள் பறிக்கப்படுவதும், அவைகளின் மீது திரும்பத் திரும்ப ஏவப்படும் தாக்குதல்களையும், அதனால் இந்தப் பூவுலகில் கருகி வாடி உதிரும் பூவிதழ்களையும்,சமூக அக்கறையுடனும் வாஞ்சையுடனும் நுட்பமாகப் பேசியுள்ளார் கவிஞர்.
இத்தொகுதியில் உள்ள பல கவிதைகள் சமூகத்தின் மீதான இவரது கவலையை, அக்கறையை ஆதங்கத்தோடு பதிவு செய்கின்றன . நம்முன் தாண்டவமாடுகிற சமூக அவலங்களை உடனடியாய் அகற்றியாகவேண்டியதற்கான முன்னெடுப்பாய்ச் சிந்திக்கவைக்கின்றன.
Release date
Ebook: 10 April 2024
English
India