Step into an infinite world of stories
சமீபத்தில் நூலகத்தில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தேன். அப்பொழுது சாலையில் ஒரு இளம் பெண் 'டாஸ்மாக்' கடையில் இருந்து, ஒரு 'பாட்டிலை' வாங்கிக் கவரில் வைத்து, டூ-வீலரில் பத்திரப்படுத்தி வைப்பதைப் பார்த்தேன்.
என் மனதில் ஒரு நெருடல். அந்தப் பெண்ணைப் பார்த்தால், படித்த பெண் போல்தான் தோன்றியது. அவளின் இந்தப் போக்கை என்னவென்று சொல்வது?
ஆணுக்குப் பெண் என்பவள் சமம்.... இறைவனின் அர்த்தநாரிஸ்வரர் கோலம் அதைத்தான் உணர்த்துகிறது.
‘ஆணுக்குப் பெண் இளைப்பில்லை' என்று முண்டாசுக் கவிஞன் பாரதியும் பாடி இருக்கிறான். அதற்காக, ஆண்கள் செய்யும் கெட்ட விஷயங்களைப் பெண்களும் செய்ய வேண்டுமா என்ன?
பெண்கள் புகை பிடிப்பதும், மது அருந்துவதும் சமத்துவம் ஆகாது.
துரதிர்ஷ்டவசமாக இப்பொழுதுள்ள பெரும்பாலான படங்களில் இளைஞர்கள், சனி, ஞாயிறு ஆனால் பீர் குடித்துவிட்டு, பிரியாணி சாப்பிட்டுவிட்டுக் குப்புறப்படுத்துத் தூங்குவது போன்ற காட்சிகள் உள்ளன. இது ஒரு கலாசார சீர்கேடு.
குடியின் போதையில் குடும்பத்தை மறந்து, புத்தி பேதலித்து, உடல் சீர்கேடு அடைந்த 'குடி'மகன்களின் எண்ணிக்கை, நம் தமிழகத்தில் பெருகிவிட்டது.
இதனை விட்டு வெளிவர முயற்சி எடுக்க வேண்டும். தனி மனிதன் முயற்சி மட்டும் போதாது. குடும்பத்தின் ஒத்துழைப்பும் இதற்கு அவசியம். முயற்சித்தால், முடியாதது இல்லை.
Release date
Ebook: 17 May 2021
English
India