Step into an infinite world of stories
உலகில் அனைத்து நிகழ்வுகளும் ஒன்று நேர்மறையாகவும் ஒன்று எதிர்மறையாகவும் நடந்து கொண்டே இருக்கின்றது.
இரவு என்றால் பகல், இன்பம், துன்பம், இம்மை, மறுமை, பிறப்பு, இறப்பு, இவ்வாறு அனைத்திலுமே இரண்டு இரண்டாக உள்ளது.
இனியவை எவையோ அவற்றை ஏற்றுக் கொண்டால் அவன் மறுமையில் சொர்க்கத்திற்குச் செல்லலாம். அல்லது முக்தி அடையலாம்.
கெட்ட வழிகள் என்று தெரிந்து கொண்டு அவற்றை தவிர்ப்பதன் மூலம் அவன் நரகம் செல்வது மறுபடியும் பூமியில் பிறப்பது தவிர்க்கப்படுகிறது.
எனவே, ஒவ்வொரு மனிதனும் நல்லவை இவை என்று தெரிந்து கொள்வது போலவே கெட்டது இவை என்று அதனையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
நல்லதும் கெட்டதும் தெரிந்து கொண்டால் தான் இந்த உலகில் வாழ முடியும். அதில் நல்லதை ஏற்றுக் கொண்டு கெட்டதை புறக்கணிக்க வேண்டும்.
எனக்கு கெட்டது எதுவென்றே தெரியாது என்று ஒருவன் கெட்ட வழியில் சென்று விட்டு அதற்கு மன்னிப்பு கேட்பது முறையானது அல்ல.
ஒரு உடல் சமநிலையில் இருக்கின்றது. அதில் ஒரு நோய் உண்டாகிறது. அந்த நோய் துன்பமானது. அந்த துன்பம் தரும் நோயையும் உணர வேண்டும். அதாவது போக்கிக் கொள்ள வேண்டும்.
நோய் என்ற துன்பம் நீங்குவதால் இன்பம் வந்து விட்டது என்ற அர்த்தமல்ல. உடல் சமநிலையை அடைந்திருக்கின்றது என்பதுதான் உண்மை.
ஒரு மனிதன் தலை நிமிர்ந்து செல்வது இனிய நிகழ்வு. அது இனியது. அதே மனிதன் காதலில் முள் குத்துவதோ அல்லது கல் இடறுவதோ அல்லது நிமிர்ந்து நடக்கும்போது தலையில் ஏதோ இடிப்பதோ இன்னாதவை.
எனவே, இனியவை எவை என்று அறிவது போலது இன்னாதவை எவை என்று அறிந்து கொள்ள வேண்டும்.
இன்பமாக வாழ்வது குறித்து இனியவை நாற்பது கூறினாலும் துன்பம் இல்லாமல் வாழ்வதைப் பற்றி இன்னா நாற்பது கூறுகிறது.
நாற்பது என்ற எண்ணிக்கையில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் நான்கு நூல்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் அக நூல்களாக கார் நாற்பதும், களவழி நாற்பது இடம் பெற்றுள்ளது.
புறத்திணை பாடல்களாக இனியவை நாற்பதும், இன்னா நாற்பதும் உள்ளன. இதில் காலத்தைப் பற்றி அறிந்து கொள்வது கார் நாற்பது. இடத்தைப் பற்றி அறிவது களவழி நாற்பது.
பொருள் கருதி வருவது இன்னா நாற்பது, இனியவை நாற்பது. இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன.
இதில் வரக்கூடிய ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளைக் கொண்ட வெண்பா. இந்த நூல் நான்மணிக்கடிகையைப் போலவே ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு கருத்து என்ற அடிப்படையில் நான்கு வரியில் நான்கு கருத்துக்கள் கூறப்பட்டிருக்கும்.
இந்தப் பாடலில் ஒவ்வொரு வரி இறுதியிலும் இன்னா என்றே முடியும். இந்த நூலை எழுதியவர் கபிலர் என்பவர். சங்க காலத்தில் வரும் கபிலர் வேறு. இந்த கபிலர் வேறு.
இதில் வரும் கடவுள் வாழ்த்துப் பாடலில் சிவபெருமான், திருமால், பிரம்மன், முருகப் பெருமான் ஆகியவர்களின் திருவடிகளை வணங்கி தொடங்குகிறார்.
இந்த கடவுள்களை வணங்காதவர்கள் துன்பம் அடைவார்கள் என்று கூறுகிறார். திருக்குறள், நாலடியாரைப் போன்று அதிகார வரிசை உருவாக்கி அளவுபட கூறவில்லை.
இருப்பினும் இந்த நூலிலும் கள் உண்ணுதல் திருடுதல், புலால் உண்ணுதல் போன்ற தவறுகள் கண்டிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் இன்னாதவை என்று கூறப்படுகிறது.
இனியவை நாற்பது சர்க்கரை கலந்த பால் என்றால் இன்னா நாற்பது உடல் நோயைத் தீர்க்கும் மருந்தாகிய வேப்பஞ்சாறு என்று சொல்ல முடியாவிட்டாலும் இதுவும் சுவையானதே.
Release date
Ebook: 17 May 2021
English
India