Step into an infinite world of stories
Fiction
நடிப்பின்மேல் இருந்த ஆர்வத்தினால் சிறுவயது முதல் சென்னை மேடை நாடகங்களில் 27 வருடங்கள் நடித்திருக்கிறேன். சிறு வேடம் முதல் கதாநாயகன் வரை பல பாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.
சென்னையில் சபாக்கள் கொடிகட்டிப் பறந்த காலங்களில் நான் கதாநாயகனாக நடித்த சில வெற்றி நாடகங்கள் லவ் இன் மதுரா, டாப் சீக்ரெட், திடீர் மனைவி, ஹீரோயின் 27, தொடர்ந்த கதை முடிவதில்லை செக்ஷன் குறிப்பிடத்தக்கவை. 1983-ஆம் வருடம் தீபாவளி அன்று மேடையில் பிரபலமான திடீர் மனைவி சென்னை தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டு மக்களின் பாராட்டைப் பெற்றது. அதிலும் நான் கதாநாயகனாக நடித்தேன்.
இன்ஷூரன்ஸ் கம்பெனியில் அதிகாரியாக பணியாற்றிய நான் 1998-ஆம் ஆண்டு வேலையிலிருந்து விலகினேன். என் ஆர்வம நடிப்பிலிருந்து எழுத்துக்குத் திரும்பியது.
என் முதல் நாவல் இரண்டாவது சந்தர்ப்பம், வித்யாவுக்கு நினைவு திரும்புமா? என் இரண்டாவது நாவல், அரவிந்தின் அற்புதத் தியாகம் என் மூன்றாவது நாவல். இம் மூன்று நூல்களுக்கும் அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகம் விருது வழங்கி கௌரவித்தது.
Release date
Ebook: 9 July 2021
English
India