Step into an infinite world of stories
Fiction
பத்து கதைகள். கிட்டத்தட்ட பத்து களங்கள். பத்து விதமான பின்புலங்கள். ஒவ்வொரு கதையிலும் பல்வேறு விதமான மனிதர்கள். மகத்தான கலையைத் தன் வசமாக்கியும் இன அடையாளத்தின் சுமை தாங்கமுடியாமல் கூனிக் குறுகும் இசைக் கலைஞர்கள், துளசிச் செடிகளை நேசிக்கும் மனிதர்கள், சக மனிதர்களைச் சுமையாக நினைக்கும் மனிதர்கள். ஆண்மைய நிலப்பிரபுத்துவ உணர்வில் ஊறிப் போன பெரியவர், பெண் குழந்தை பிறந்தால் அதைக் கொன்று விடும்படி பணிக்கப்பட்ட ஆயா என்று பலவிதமான மனிதர்கள் நம்மோடு உறவாடுகிறார்கள். கதைகளைப் படிக்கும்போது உண்மையிலேயே அவர்களைப் பார்த்துப் பழகிய உணர்வை வாஸந்தியின் எழுத்து ஏற்படுத்திவிடுகிறது. இயல்பானதும் வலுவானதுமான சித்தரிப்பினால் தன் புனைவுலகின் களங்களையும் மனிதர்களையும் நமக்கு மிக நெருக்கத்தில் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறார். அவர்களுடன் இணைந்து நாமும் பயணிப்போம்...
Release date
Ebook: 5 January 2022
English
India