Step into an infinite world of stories
5
Non-Fiction
a proud audio book production by Aurality tamil audio book and itsdiff entertainment http://aurality.app to download our app to provide feedback பொற்கை சுவாமி - ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் - காற்றின் திசை காற்றின் வேகம் காற்றின் மொழி. ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ‘தங்கக் கை சுவாமிகள்’ என்று அனைவராலும் அழைக்கப்பட்ட மகான். பகவான் ரமணரின் சமகாலத்தவர். சுவாமிகள் தொட்டது துலங்கும். மகா ஞானி. திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்த சந்நியாசி. அதிகம் பேசாமல், மிகக் குறைந்த வார்த்தைகளில் உலகையே ஸ்தம்பிக்கச் செய்யும் பேருண்மைகளைச் சொல்லி விடும் பித்து நிலைச் சித்தர். ஞான திருஷ்டியில் முக்காலமும் திரிபவர். அஞ்ஞானத்தை அறுத்து மெய்ஞானத்தைத் தன் சிஷ்யர்களுக்கு அளித்தவர். காஞ்சி காமாட்சியின் அவதாரம். ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் போலப் பல சித்தர்கள் எவ்வித உரைநூலோ உபதேசங்களோ வழங்காமல், தங்களது யோக சித்திகள் மூலம் வாழ்ந்து காட்டிச் சென்று விடுகிறார்கள். அவர்களது ஞானத்தின் விரிவு நூல்களாகத் தொகுக்கப்படுவதில்லை. இதுபோன்ற பிரம்மஞானிகளின் வாழ்க்கையை இதுபோன்ற சித்திரமாகத் தீட்டும்போதுதான், அவர்களைப் பற்றிய தகவல்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்த முடியும். சேஷாத்ரி சுவாமிகளைப் பற்றிப் பேசும்போது பகவான் ரமணரைப் பற்றிப் பேசாமல் இருப்பது எங்கனம்? இந்த நூல் பகவான் ரமணரைப் பற்றிய ஒரு சித்திரத்தையும் சேர்த்துத் தருவது அழகு. அதோடு, சுவாமிகளின் சமகாலத்து ஞானிகளைப் பற்றிய குறிப்புகளும் இந்நூலில் உள்ளன. படிப்பவர்களைக் கரைய வைக்கும் அழகுத் தமிழில் எழுதப்பட்டிருக்கும் நூல் இது. எழுத்தாளர் சத்தியப்பிரியன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். a proud audiobook production from Aurality
© 2024 itsdiff Entertainment (Audiobook): 9798882487248
Release date
Audiobook: 2 October 2024
English
India