Step into an infinite world of stories
4.7
Religion & Spirituality
முன்பெல்லாம் அயோத்தி என்றதுமே நமக்கு முதலில் நினைவுக்கு வந்தது ஸ்ரீ ராமன் எனும் பெயர்தான். ஆனால் 6 டிசம்பர் 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பிறகு, ‘சர்ச்சைக்குரிய இடம்’ என்றுதான் நினைவுக்கு வருகிறது. உண்மையில் அயோத்தியில் நடந்தது என்ன, நடப்பது என்ன என்பது குறித்த வரலாற்று உண்மைகள் பலருக்கும் தெரியவில்லை.
• அயோத்தியில் ராமர் அவதரித்தார் என்பதற்கான புராண ஆதாரங்கள் யாவை? • பாபர் மசூதியின் வரலாறு என்ன? • நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிலவும் இந்தப் பிரச்சினையில் இருக்கும் சிக்கல்கள் யாவை? • இந்தப் பிரச்சினையால் இந்திய அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் யாவை? • அயோத்தி தொடர்பாக நடந்த வழக்குகள் எத்தனை? இறுதித் தீர்ப்பின் சாராம்சம் என்ன?
இவை போன்ற முக்கியமான கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் விளக்கமளிக்கிறது.
இந்திய வரலாற்றில் நடந்த முக்கியமான நிகழ்வின் ஆதாரபூர்வ பதிவாக இந்தப் புத்தகம் இருக்கும்.
எழுத்தாளர் ஆர். ராதாகிருஷ்ணன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
© 2024 itsdiff Entertainment (Audiobook): 9798882346088
Release date
Audiobook: 1 June 2024
English
India