Step into an infinite world of stories
Fiction
சர்வ தேச சிறுகதைகள் - என்ற தொகுப்பில் எல்லா நாட்டின் சிறுகதைகளும் இடம் பெறவில்லை. சில நாடுகளின் கதைகள் வழியாகவே பல நாடுகளை அறிந்துகொள்வது சாத்தியம் என்பதுதான் இம்மாதிரியான தொகுப்புகளின் பொருள். இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு சிறுகதையும் தன்னளவில் வித்தியாசப்பட்டுத் தனித்தன்மையும் - அதே நேரத்தில் மனிதர்கள் பற்றிய சிறுகதைகள் என்பதால் ஒன்றுபட்டும் உள்ளன. அந்தப் பொதுத் தன்மை காலம், இடம், மொழி, கருத்து, கோட்பாடுகள், இலக்கியம் என்று சொல்லப்படும் பல அம்சங்களையும் தகர்த்து விட்டு அனுபவம் என்று சொல்லப்படும் மானிட அனுபவத்தில் ஒரு சரடாக இணைந்து போய் விடுகிறது. அதனை ஒவ்வோர் ஆசிரியரும் எவ்வாறு சாத்தியமாக்கி இருக்கிறார்கள் என்பதை சர்வதேச சிறுகதைகளின் வழியாக ஓரளவு காணமுடிகிறது என்பது சிறப்பு.
Release date
Ebook: 23 December 2021
English
India