எண்ணப்படியேவா எல்லாருக்கும் மனைவி அமைந்து விடுகிறது. அல்லது விருப்பப்படியேவா பெண்ணுக்கும் கணவன் அமைந்து விடுகிறான்? முழுக்க முழுக்க யாருக்கும் அப்படி அமைவதில்லை. அமைந்ததைச் சரி செய்து கொள்வதுதான் வாழ்க்கை. மாதவனுக்கும் அப்படித்தான். அவன் நினைத்திருந்தது வேறு. வந்து அமைந்தது வேறு. ஆனால் அவனைப் பக்குவப் படுத்தகிறார்கள் பெற்றோர். வாழ்க்கை என்பதே சமரசம் செய்து கொள்வதுதான் என்பதைப் புகட்டுகிறார்கள். அர்த்தமில்லாத இந்த வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கற்பித்துக்கொண்டு வாழ்வதுதான் விவேகம் என்கிற தத்துவத்தை அவன் நாளடைவில் உணர்கிறான். தெளிந்த நீரோடையாய்ச் செல்லும் இந்த வாழ்க்கையை ஏன் அநாவசியமாய்க் கெடுத்துக் கொள்ள வேண்டும்? என்று நிதானத்துக்கு வருகிறான். அவளும் அவன் போக்கில உண்டான மாற்றங்களைக் கவனித்து, படிப்படியாகத் தன்னை அவனுக்கேற்றாற்போல் வளைத்துக் கொள்கிறாள். வாழ்க்கை சந்தோஷமாகிறது.
Release date
Ebook: 18 May 2020