Step into an infinite world of stories
Fiction
அழகிய பெரியவன் நவீன தமிழ் இலக்கியத்தின் தனித்துவமிக்க எழுத்தாளர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை பிறப்பிடமாகக் கொண்டிருக்கிறார். இயற்பெயர் சி. அரவிந்தன்.
தொண்ணூறுகளில் எழுதவந்த அழகிய பெரியவன், தனது முதல் சிறுகதைத் தொகுப்பான, ‘தீட்டு’ மூலம் மிகவும் பரவலான கவனத்தை ஈர்த்தார். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என பல தளங்களில் எழுதிவருகிற இவர், மனித உரிமை சார்ந்த வெகுமக்கள் போராட்டங்களிலும் களச்செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார். இதுவரை எழுபதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், சில குறுநாவல்களையும் எழுதியிருக்கிறார். அவை அய்ந்து தொகுதிகளாக வெளி வந்துள்ளன. தகப்பன் கொடி, வல்லிசை ஆகியவை இவரின் பிற நாவல்கள். கவிதைகள் நான்கு தொகுதிகளாகவும் கட்டுரைகள் ஆறு தொகுதிகளாகவும் வெளிவந்துள்ளன.
தகப்பன் கொடி நாவலுக்கும் உனக்கும் எனக்குமான சொல் கவிதை நூலுக்கும் தமிழக அரசின் பரிசைப் பெற்றிருக்கிறார். இந்தியா டுடே விருது, சிற்பி கவிதை விருது, சு.சமுத்திரம் இலக்கிய விருது, தந்தைப் பெரியார் விருது என பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றிருக்கிறார். இவரின் ஆக்கங்கள் பல்வேறு கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. பட்ட மேற்படிப்பு ஆய்வுகளை பலர் மேற்கொண்டுள்ளனர். ஆங்கிலம், வங்காளம், மலையாளம், கன்னடம், உருது, தெலுகு, செக் ஆகிய மொழிகளில் இவருடைய படைப்புகள் பலவும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
Release date
Ebook: 15 September 2020
English
India