Step into an infinite world of stories
Fiction
இறைக்குத் தமிழ்நாட்டின் சமூக வாழ்க்கையின் முக்கியமான மூன்று இழைகள் அரசியல், சினிமா, மதம். அரசியல் என்றால் எவனும் அரசியல்வாதிகள், கட்சிகள், கொள்கைகள், கொடிகள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்பதில்லை. அதிகார வர்க்கம், மக்கள் தொடர்புச் சாதனங்கள், அரசியல்வாதிகளைப் பின்னிருந்து இயக்கும் பண முதலைகள் எல்லாம் இதில் அடக்கம்.
சினிமாவும் இதே போலத்தான், வெறுமே சூப்பர் ஸ்டார்களும் கவர்ச்சி நடிகைகளும் மட்டும் கொண்டதல்ல சினிமா. மக்களின் அபிப்பிராயங்களை, நடை, உடை, பாவனைகளை, கருத்துகளின் ரொம்பச் சுலபமாக மாற்றி அமைக்கக் கூடியது. சினிமாவின் தாக்கம் எப்படிப்பட்டது என்பதற்கு வேறு உதாரணமே வேண்டாம். இந்த நாற்றாண்டில் தமிழகத்தில் இரண்டு துருவங்களாக செயல்பட்ட இராஜாஜியும் பெரியாரும் அதை எதிர்த்ததே அதனுடைய செல்வாக்கு எத்தன்மையது என்பதை நமக்கு எடுத்துக் காட்டும். மதம் என்பதோ அரசியல், சினிமா இவற்றை விட சர்வ வியாபகம் பொருந்தியது. அரசியல் - ஜனநாயக அரசியல் - மக்கள் பங்குகொள்ளும் அரசியல் ஒரு நாறு வருடத்தின் வரலாறு கொண்டது. சினிமாவின் வரலாறோ அதனினும் குறுகியது. மதம் கல்பகோடி கால சமாசாரம்.
இத்தகையதொரு சூழ்நிலையில் நாவலாசிரியர் சா. கந்தசாமி அரசியலையும், மதத்தையும் பின்புலமாக்கித் தனது புதிய நாவலை உருவாக்கி இருக்கிறார். நாவலில் பிரதான கதாபாத்திரங்கள் இரண்டே பேர்கள்தான். பஸ் கண்டக்டர் தங்கராசும் பள்ளிக்கூட டீச்சரும், அவர் மனைவியுமான ருக்குமணியும். கதையும் ரொம்ப எளிமையானதுதான். கண்டக்டர் தங்கராசு அவருக்குச் சிறிதும் சம்பந்தமேயில்லாத சமூகக் குளறுபடி ஒன்றில் சிக்கி உயிர் துறக்கிறார், அவர் மனைவி ருக்குமணி வியாதி ஒன்றினால் பாதிக்கப்பட்டு உயிர்வாழும் தெம்பை அணு அணுவாக இழந்து வருகிறாள்.
ஆனால் இந்த நாவலின் முக்கியத்துவம் அதனை எடுத்துச் செல்லும் இலேசான கதை அமைப்பினுள் அடங்கு வதல்ல. அமெரிக்க நாவலாசிரியர் எர்னஸ்ட் ஹெமிங்வே ‘நாவலாசிரியன் தன் படைப்பில் அந்த Tip of the Iceberg தான் காட்டிச் செல்ல வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தன்னைப் பத்தில் ஒரு பங்கு மட்டுமே காட்டி நிற்கும். மற்ற ஒன்பது பங்கு பனிப்பாறை நீர் மட்டத்திற்குக் கீழே நம் கண்ணுக்குப் புலப்படாத வகையில் தேங்கிக் கிடக்கும். இந்த கலை சூட்சுமம் சா. கந்தசாமி அவர்களுக்குச் சரியாகவே பிடிபட்டிருக்கிறது.
அவன் ஆசிரியர் பிரதிநிதியாக எம். எல். ஏ. ஆகிறான். ஆசிரியர்களிடம் தவணை முறையில் நிதி வசூலித்து வெள்ளை அம்பாஸிடர் கார் வாங்குகிறான். தனக்கு மிக நெருக்கமான டீச்சரிடம் கொடுத்த சிறிய வாக்குறுதியை காப்பாற்றத் தெரியாத - விரும்பாத இவன், தொகுதி மக்களுக்கு எத்தனை வாக்குறுதிகள் கொடுத்திருப்பான், அவற்றில் எத்தனை பங்கு நிறைவேற்றியிருப்பான் என்பதை நாம் சுலபமாகவே அனுமானிக்க முடியும்,
சரோஜினி டீச்சர் ஒரு சம்பாஷணையின் போது வரதட்சணை, கல்யாணம், சீர் செய்து கொடுப்பது போன்ற சமாசாரங்களில் தன் ஜாதியின் மகத்துவத்தை’ எடுத்துக் கூறுகிறாள்.
‘வைரத் தோட்டுல அரை காரட்டு குறைஞ்சி போய்ச்சின்னு, என் மாமியார் புருஷன்கிட்ட ரெண்டு மாசம் படுக்கவிடல.’அடுத்த வரி இதற்கும் மேலே போய் அவள் கணவனைத் தாக்குகிறது.
இத்தனை பேச்சு மத்தியிலும் ஆசிரியர் மறந்தும் கூட குறுக்கிடவில்லை, சரோஜினி என்ன ஜாதி என்றோ, ருக்குமணி என்ன ஜாதி என்றோ தீர்மானிக்கும் பொறுப்பை வாசகரிடம் விட்டு விடுகிறார்.
இந்த நாவலில் அரசியல் பிரதான பங்கு வகிக்கிறது என்று முன்னமேயே குறிப்பிட்டேன். போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கும் காவல் துறை நாழியர்களுக்குமான மௌன யுத்தம் ஒருநாள் தெருச் சண்டையாக வெடிக்கிறது. அப்பாவி கண்டக்டர் தங்கராசு எப்படியோ இதில் சிக்கி உயிர் துறக்கிறார். ஒரு தனி மனிதனின் அர்த்தமற்ற சாவு இந்த நாவலாசிரியரைப் பாதித்திருக்கிறது. ‘ஒரு தனி மனிதன் இறந்தால் அது செய்தி; பல்லாயிரக் கணக்கானவர்கள் இறந்து போனால் அது வெறும் புள்ளி விவரம்’ என்றார் சோவியத் ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் தனலவர் ஸ்டாலின்...
தங்கராசு என்ற தனிமனிதனின் சாவுச் செய்தி என்ற அதன் ஒற்றைப் பரிமாண நிலையிலிருந்து வளர்ந்து, அதன் அரசியல் சகப் பின்னணிகள் என்ன என்ற விஷயங்கள் ஆராயப்பட வேண்டிய நிகழ்ச்சியாக இரட்டைப் பரிமாணம் பெற்று, கைதேர்ந்த நாவலாசிரியராக சா கந்தசாமியின் இலக்கியத் திறமையால் ஒரு முழுமையான கனலப்படைப்பு என்ற மூன்றாவது பரிமாண வளர்ச்சியைப் பெற்று நிற்கிறது. தமிழ்நாட்டு வாசகர்கள் இந்த நாவலின் தீவிரத்தன்மையையும், சமூக வரலாற்றுத் தன்மையையும், கனவு முதிர்ச்சியையும் அங்கீகரித்து இது சமீப காலத்திய மிகச் சிறந்த படைப்பு என்ற நாலாவது பரிமாணத்தை இதற்கு அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
Release date
Ebook: 3 January 2020
English
India