Step into an infinite world of stories
கல்லுரியில் படிக்கும் போதிருந்தே ஒருவரையொருவர் காதலித்த வந்த மதன்குமாரும், நிவேதிதாவும், படிப்பு முடிந்ததும் தங்கள் காதலை வீட்டில் தெரிவிக்கின்றனர். காதலை ஆதரிக்கும் இரு வீட்டுப் பெற்றோரும் தங்கள் வாரிசுகளின் காதலுக்கு எந்த வித மறுப்பும் சொல்லாது போக, எளிதாக காதல் வெல்கிறது. திருமணமும் நடைபெறுகின்றது.
திருமணத்திற்குப் பின், அலுவலகப் பணி காரணமாக அடிக்கடி பெங்களூர் செல்லும் மதன்குமாருக்கு, பெங்களூர் அலுவலகத்தில் பணி புரியும் ஸ்வேதா என்ற பெண்ணுடன் நெருக்கம் ஏற்படுகிறது. அந்த நெருக்கம் காதலாக மலர, தனக்குத் திருமணமாகிவிட்டது என்கிற உண்மையை மறைத்து, ஸ்வேதாவைக் கல்யாணம் செய்து கொள்கிறான்.
நிவேதிதாவிற்கு, ஆண் குழந்தை பிறக்கும் அதே நேரத்தில் ஸ்வேதாவும் ஒரு ஆண் குழந்தைக்குத் தாயாகிறாள். ஆனால், விதியின் விளையாட்டு காரணமாய், பெங்களூர் பஸ் விபத்தில் மதன்குமார் உயிர் துறக்கிறான்.
பல வருடங்களுக்குப் பின், அந்தக் குழந்தைகள் இருவரும் வளர்ந்து விட்ட காலகட்டத்தில் ஒருவரையொருவர் சந்திக்க நேரிடுகிறது. அச்சில் வார்த்தாற்போல் இருவரும் ஒன்றே போல் இருக்க, இரு தாயார்களும் சந்திக்கின்றனர்.
அடுத்து வரும் திருப்பங்கள்தான் இந்த நாவலின் சுவாரஸியங்கள்.
Release date
Ebook: 5 February 2020
English
India