Step into an infinite world of stories
Fantasy & SciFi
எல்லாருக்கும் வணக்கம்.
"கிளாப் ரெடி."
இந்த மின்புத்தகம் இப்போது உங்கள் பார்வையில். இது ஏற்கனவே நான் எழுதி,- "விக்னேஸ்வரனாகிய நான்" என்று பெயரில் புத்தகமாக வெளியாகி பலருடைய பாராட்டையும், பரபரப்பான விற்பனையும் ஆகி கொண்டு உள்ளது. குறிப்பாக எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகர், எஸ், ராமகிருஷ்ணன், மற்றும் ஒளிப்பதிவாளர் செழியன் அவர்கள் பாராட்டியது ஸ்பெஷல். அந்த புத்தகம் நான் எழுதிய போது, அதற்கு வைத்த தலைப்பு இந்த "கிளாப் ரெடி" பின்னர் பதிப்பகத்தாரின் விருப்பத்திற்கு இணங்க "விக்னேஸ்வரனாகிய நான்" ஆகியது.
கிளாப் ரெடி!- சினிமாவில் புதிதாய் சேரும் உதவி இயக்குனர் ஒருவன் சுதந்திரமாய் உச்சரிக்கும் முதல் வார்த்தைகள் இவை. "ஸ்டார்ட்! கட்!" - என இயக்குனர் சொல்லும் முன்பு, அவர் கேட்கும் முதல் கேள்வி "கிளாப் ரெடியா?" உடனே கிளாப்பில் ஷாட், டேக், நம்பர்கள் எழுதி வைத்திருக்கும் உதவி இயக்குனர் "கிளாப் ரெடி" என்பார். அப்படி சினிமாவில் சேர்ந்த பொழுது நான் உச்சரித்த இந்த முதல் வார்த்தைகள், ஏற்படுத்திய ஜில்லிப்பு இன்னும் அப்படியே எனக்குள் இருக்கின்றது.
விஜயா கார்டெனில் (இப்போது அந்த ஸ்டூடியோ இல்லை) முதல் நாள் படப்பிடிப்பு. முற்றிலும் புதுமுகங்கள். இயக்குனர் புதுசு. நான் உதவி இயக்குனர். பாடல் காட்சி. நான் "கிளாப் ரெடி" என கூறி கிளாப் காட்ட, கேமரா ஓட தொடங்கியது. அன்று ஆரம்பித்த படப்பிடிப்பு அதாவது அந்த படம், ரெண்டு நாள் படப்பிடிப்புடன் நின்றுவிட்டது. ஆனால் அன்று நான் சொன்ன "கிளாப் ரெடி." என்ற வாரத்தை என் மனசுக்குள் அப்படியே நின்றுவிட்டது.
பிறகு, பெரிய போராட்டத்திற்கு பிறகு இயக்குனர் திரு. கே.ராஜேஸ்வரிடமும், தொடர்ச்சியாக திரு. பவித்ரன், திரு. ஷங்கர் இவர்களிடம் வேலை செய்து, பின் தனியாக "மகா பிரபு" படம் இயக்க, வாய்ப்பு கிடைத்து, இயக்குனர் ஆனேன்.
ஆனால் இந்த பயணத்தில் ஏற்பட்ட போராட்டங்கள் தனி என்றாலும், நடந்த சுவாரஸ்யங்கள் ஏராளம். சினிமாவில் மட்டும் அல்ல, என் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யங்கள் நெறைய. அவை எல்லாவற்றையும், தொடர்ச்சியாக இல்லாமல், தனித தனியாக தொகுத்துள்ளேன். அத்தனையும் உங்களுக்கு புதிய அனுபவமாய் இருக்கும். படியுங்கள்! பகிருங்கள்!
இந்த புத்தகத்தை மின் புத்தகமாக வெளி கொண்டு வர உதவி செய்த எழுத்தாளர் திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களுக்கும், நல்ல புத்தங்களை தேடி கொணர்ந்து, மின் புத்தகமாய் வெளியிடும் ரசனையாளர் Pustaka திரு.ராஜேஷ் அவர்களுக்கும் மற்றும் அவரது நிறுவனமான Pustaka Digital Media Pvt. Limited-க்கும், எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
ரெடியா?
இதோ - "கிளாப் ரெடி"
என்றும் அன்புடன்,
ஏ.வெங்கடேஷ்.
Release date
Ebook: 2 July 2020
English
India