Step into an infinite world of stories
"சாம்" என்று காதருகே ஒலித்த குரல் அவனைச் சலனப்படுத்தவில்லை. சிலை போல அமர்ந்திருந்தவனின் தோள் பற்றி உலுக்கினாள்.
"சும்மா விளையாட்டுக்கு சீண்டிப் பார்த்தேன் சாம். நமக்குள்ள இதுவரைக்கும் சண்டையே வந்ததில்ல. இதைக் காரணமா வெச்சு சின்னதா கோபப்படுத்திப் பார்க்கலாமேன்னு..! இதுக்குப் போய் தூங்காம உட்கார்ந்து இருப்பீங்களா? எழுந்து வாங்க." ரிமோட்டைப் பிடுங்கி தொலைக்காட்சியை அமர்த்தினாள்.
ஆளை விழுங்கும் சோபாவில் அசையாமல் அமர்ந்திருந்தான் சாம். அவனுக்கு இன்னும் கோபமோ, வருத்தமோ அடங்கவில்லை என்பதை அவனது உடல்மொழி தெரிவிக்க, வருத்தத்துடன் பார்த்தாள் மெர்லின்.
"அந்த ஆத்ரவ் ஃபேமிலி பற்றி அங்கிள் எல்லாமே சொல்லிட்டாரு... ப்பா... நான்தான் வேணுமின்னே... ஸாரி.. ஸாரி..!" அவன் மோவாயைத் தடவிக் கொஞ்சினாள்.
"உங்களைச் சீண்டிப் பார்த்து நான் உங்ககிட்ட விளையாடக்கூடாதா? இதுக்கு இவ்வளவு கோபமா? கோபத்துல கூட சாம் ரொம்ப அழகு." பச்சென்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
விருக்கென்று திரும்பியவன், அவளை வாகாக முன்னே இழுத்து, தன் இரு கரங்களுக்குள் சிறையாக்க, கோபம் கலந்த அந்த மூர்க்கத்தை வெகுவாக இரசித்தாள் மெர்லின்.
"இதுகூட நல்லாத்தான் இருக்கு. ஆனால், நம்ம ரூமுக்குப் போய் வெச்சுக்கலாமா? இது ஹால்-ன்னு மறந்துடக்கூடாது." அவன் தோள்வளைவில் பற்களைப் பதித்து மென்மையாகக் கடித்தாள்.
"சீண்டிப் பார்த்தால் என்ன ஆகும் என்பதை நீயும் இன்று மறக்க மாட்டாய். இனி எப்போதும் என்னைக் கோபப்படுத்தவும் துணியமாட்டாய்." என்று அலேக்காக அவளைத் தூக்கியவன், அப்படியே அறை நோக்கிச் செல்ல, அக்கணம் இருவரின் கண்களும் இணைந்து எழுதிய 'காதல்', வார்த்தைச் சிறைக்குள் அடைபடாது!
Release date
Ebook: 5 January 2022
English
India